Top posting users this month
No user |
Similar topics
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு தந்த உணவில் பல்லி! புகைப்படத்தால் பரபரப்பு
Page 1 of 1

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததாக வெளியான தகவலை வதந்தி என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவுத் தட்டில் பல்லி ஒன்று கிடந்ததாக தகவல் வெளியானது.
மேலும், இதனால் மற்ற பயணிகளும் தங்களது உணவை வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக உணவுத் தட்டில் பல்லி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், இப்படி ஒரு சம்பவம் ஒருபோதும் நடக்கவில்லை.
இது தொடர்பாக லண்டனிலோ, டெல்லியிலோ, விமானத்திலோ புகார் செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக விமானத்தின் பிற பயணிகளோ, விமான ஊழியர்களோ அறியவில்லை. எனவே இது ஒரு வதந்தி என்பது தெளிவாக தெரிகிறது.
சமூக வலைத்தளத்தில் வெளியான படத்தால்தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. அந்த படத்தை வெளியிட்டது யார், அவர் கூறியது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இது வதந்தி என்று கண்டறியப்படும்போது, அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கள் உணவு, இந்தியாவின் சிறந்த தாஜில் தயாரிக்கப்படுபவை. விமானத்தில் தலை சிறந்த, விருதுக்குரிய உணவை தாஜ் சட்ஸ் தயாரித்து வழங்குகிறது.
மேலும், எங்கள் பெயரை கெடுக்க தான் இவ்வாறு செய்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வான்வெளியில் திடீரென்று வந்த பறக்கும் தட்டு: மாணவன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு
» ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தீ விபத்து: பயணிகள் காயம்
» 2020-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இந்தியா? வரைபடத்தால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum