Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் மெட்ரோ ரயில் பணியின்போது வீடுகளில் திடீர் விரிசல்! பொதுமக்கள் பீதி
Page 1 of 1

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது 5 வீடுகளில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக நடக்கின்றன.
நேற்று முன்தினம் இரவு சிந்தாதிரிப்பேட்டை அய்யாவு முதலி தெருவில் சில வீடுகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் நடுவில் உள்ள வீட்டின் கதவு, பூமிக்குள் 2 அடி ஆழத்துக்கு புதைந்ததாக கூறப்பட்டது. இதனால், கதவை திறப்பதும் சிரமமாக இருந்தது.
வீட்டில் ஆங்காங்கே விரிசல் இருந்ததால், அங்கு வாடகைக்கு வசிப்பவர்கள் பயந்து வெளியே ஓடிவந்துவிட்டனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர்.
பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வீடுகள் உடனே பூட்டப்பட்டதோடு, அங்கு இருந்த 14 பேரும் திருவல்லிக்கேணியில் தற்காலிகமாக தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்கும் முன்பு அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை ஒரு குழு ஆய்வு செய்யும்.
அங்கு உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கவனத்தில் கொண்டு, அங்கு நில அதிர்வு கருவிகள் பொருத்தப்படும்.
பணிகள் ஆரம்பிக்கும் முன்பு கட்டிடத்தின் நிலை, பணி நடக்கும் போது கட்டிடத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை இந்த கருவி பதிவு செய்துகொண்டே வரும்.
பாதிப்பு ஏற்படுவது தெரிந்தால், கட்டிட உரிமையாளருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வேறு இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.
மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது அதிர்வுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வீடுகள் அதிர்வதாக கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட அப்பகுதியினர் புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வரும் 22ம் திகதி சென்னையை உலுக்கும் புயல்: பஞ்சாங்கத்தால் பொதுமக்கள் பீதி
» சுசில், அனுர வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவு நோட்டீஸ்
» மலேசியாவுக்கு புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல்: 142 பயணிகள் அவதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum