Top posting users this month
No user |
அதிபர் நியமிப்பில் கிழக்கு மாகாண அமைச்சரின் தலையீடு: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
Page 1 of 1

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தகுதியான அதிபர் நியமிப்பில் கிழக்கு மாகாண சபையின் பொறுப்புவாய்ந்த பதவியிலிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தலையீடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நேர்முக பரீட்சை நடாத்தப்பட்டு கடமையேற்க வந்த அதிபருக்கு கிழக்கு மாகாண சபையின் பொறுப்புவாய்ந்த பதவியிலிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தடை ஏற்படுத்தியதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று 1 கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் வெற்றிடம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளிப்படைத் தன்மையான நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு தனது கடமைகளை பொறுப்பேற்பதற்கு சென்றவேளை கிழக்கு மாகாண சபையின் பொறுப்புவாய்ந்த பதவியிலிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் தடை ஏற்படுத்தியுள்ளார்.
பாடசாலையின் அதிபர் வெற்றிடம் தொடர்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தாபனக் கோவை அத்தியாயம் 2 இற்கு இணங்க ஆட்சேர்ப்பு திட்டங்களுக்கும் நியமிப்புக்களுக்கும் இணங்க அதிபர் சேவை 2 ஐ சேர்ந்தவர் சேவைப்பிரமானக் குறிப்பிற்கு அமைய தெரிவுசெய்யப்பட்டிருந்தும் சட்டத்திற்கு முரணாக கிழக்கு மாகாண சபையின் பொறுப்புவாய்ந்த பதவியிலிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தலையீடு செய்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் உயர் சட்டமான புனிதமான அரசியலமைப்பின் தாபன விதிகளுக்கும், சிவில் அரசியல் சாசனத்திற்குட்பட்ட தொழிற்சங்கத்தினை குறித்த அரசியல்வாதி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியமை சட்டவாட்சிக்கான நல்லாட்சியினைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
புனிதமான அரசியலமைப்பிற்கு இணங்க சத்தியப்பிரமாணம் செய்து சட்டவாட்சிக்கு முரணான செயற்பாடுகளினால் கிழக்கு மாகாணத்தின் கல்வியின் தரம் பின்நோக்கி செல்லும் சாத்தியமுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் இடமாற்றம், பதவியுயர்வு யாவும் நம்பகத் தன்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெற வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது.
கல்விச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சட்டத்திற்கு முரணான அதிபர் நியமிப்பு மற்றும் அதிகாரிகள் நியமிப்பு யாவற்றையும் மாகாண கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் நியமிப்பு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டுவந்துள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum