Top posting users this month
No user |
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் பதவி காலம் நீடிப்பு: ஆசிரியர் சங்கம் கண்டனம்
Page 1 of 1

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் பதவிக் காலம் முடிவடைந்தும் அவர் தானே உபவேந்தர் என செயற்படுவாராயின் பதவியின் சட்டவிரோதமான ஊழலுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கையாக அவருடன் எந்தவகையிலும் உத்தியோகபூர்வ தொடர்புகளை பேணிக் கொள்வதில்லை என கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கி.கோபிந்தரராஜாவின் பதவிக் காலத்தினை நீடித்துள்ளமையை ஆட்சேபித்து கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உங்கள் கடிதத்தில் கலாநிதி கோபிந்திரராஜாவின் உபவேந்தர் பதவிக்காலம் 2015 மார்ச் 4ஆம் திகதி முடிவடைவதாக நாங்கள் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ளீர்கள். எங்கள் கடிதத்தில் 13-02-2015 இற்குப் பின்னர் உபவேந்தர் பதவி நிலைக்கான நிர்வாக ஒழுங்கு பற்றி எமது கடிதத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள் மேற்கண்ட பதிலைத் தந்துள்ளீர்கள்.
பதிவாளர் (கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்கள் தனது 12-01-2015 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் உபவேந்தரது பதவிக்காலம் 12-02-2015 இல் முடிவடைகிறது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்து விட்டார். பல்கலைக் கழக வேந்தர், உபவேந்தர் வலுவான ஒப்பந்த நியமனங்களாகும்.
இவைகளின் நியமனத் திகதி மற்றும் முடிவடையும் காலம் என்பன சட்டம் மற்றும் வர்த்தமானியினால் தீர்மானிக்கப்படுபவை. நியமிக்கும் அதிகாரத்தினால் மாற்றப்பட்டாலன்றி அவை மாற்றப்படாதவை.
கலாநிதி கிட்ணன் கோபிந்திரராஜாவின் மூன்று வருட உபவேந்தர் காலம், பல்கலைக் கழக சட்டம் 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கம் பிரிவு 34(1) இன் கீழும், அதி உத்தம ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நியமனத்தின் படியும் உடனடியாக முடிவடையும் வகையில் 12-02-2015 அன்று நிறைவடைகின்றது.
இந்நிலையில் தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் வரை பல்கலைக்கழக பதிவாளரே உபவேந்தருக்குப் பதிலாகச் செயற்படுவார் என தாபனக் கோவைகள் பிரிவு 3:23:2:1 என எடுத்துரைக்கின்றது. கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது 12-02-2015 அன்று கலாநிதி கிட்ணன் கோபிந்திரராஜாவின் உபவேந்தர் பதவிக்காலம் முடிவடைந்து, முன்னாள் உபவேந்தராகக் கருதுகின்றது.
இன்றிலிருந்து கிழக்குப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை பதவியில்லாத ஒருவராக அவர் ஆகின்றார். தொடர்ந்தும் தானே உபவேந்தர் என அவர் கொள்வாராயின் பதவியின் சட்டவிரோதமான ஊழலுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கையாக அவருடன் எந்தவகையிலும் உத்தியோகபூர்வ தொடர்புகளை பேணிக் கொள்வதில்லை என எமது சங்கம் அறிவிக்கின்றது.
அத்துடன் பதிவாளர் அவர்களே தாபனக் கோவையின் கீழ் தாங்களே பொறுப்புக் கூறுபவர் என தெரிவிக்கின்றோம். கௌரவ உயர்கல்வி அமைச்சரினால் மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் வரை பல்கலைக் கழகத்தின் எவ்வித நடவடிக்கைகளுக்கும் தற்போதைய சூழலில் தாங்களே பொறுப்பாவீர்கள்.
தவிரவும் கடந்த 9ஆம் திகதியிலிருந்து பல்கலைக் கழகமானியங்கள் ஆணைக்குழுவினரும் இராஜினாமாச் செய்து விட்டனர் என்பதனால் தற்போது அதற்கும் பொறுப்பு இல்லை. மேலும் பல்கலைக்கழக ஊழியர்களின் தனிப்பட்ட கோவைகள் (தனிப்பட்டக் கோவை ) மற்றும் ஏனைய ஆவணங்கள் அழிக்கப்படலாம் என்ற வகையிலான வதந்திகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்.
பிரதான நிறைவேற்று அதிகாரிகள் விலகும் போது இவ்வாறானவை நடைபெற இடமுண்டு. ஆகையால் பல்கலைக்கழக சொத்துக்களின் பொறுப்பாளர் (சொத்துக்களை பாதுகாத்தல்) என்ற அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோவைகளை தங்கள் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதனை தயவு செய்து உறுதிப்படுத்துக, உபவேந்தரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இதில் அடங்கும்.
பல்கலைக்கழக அபிவிருத்தி, நல்லாட்சி, ஊழலற்ற சூழல் ஜனநாயகம் விரிவுரையார்களின் சுயாதீனம் எனும் உரிய குறிக்கோளை நடைமுறைப்படுத்த இத்தால் நாம் நிச்சயப்படுத்துகின்றோம்” என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum