Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோத்தபாயவை பிரதமாரக்குவதற்கு ஹெல உறுமய முயற்சி?

Go down

கோத்தபாயவை பிரதமாரக்குவதற்கு ஹெல உறுமய முயற்சி?             Empty கோத்தபாயவை பிரதமாரக்குவதற்கு ஹெல உறுமய முயற்சி?

Post by oviya Fri Jun 12, 2015 3:18 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜாதில ஹெல உறுமயவினால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு அவசியமான பின்னணியை தாயாரிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருங்கிய இருவரான அசோக அபேகுணசேகர மற்றும் திலித் ஜயவீர, ஹெல உறுமயவின் யோசனை எடுத்துக்கொண்டு கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளார்கள்.

இச்சந்திப்பின் போது கோத்தபாய ராஜபக்சவினால் சாதகமான முடிவு கிடைத்திருப்பதனால், மேலதிக பேச்சுவார்த்தைக்காக பிவிதுரு ஹெடக் அமைப்பின் ஏற்பாட்டாளர் அதுரலிய ரத்ன தேரர், கோத்தபாயவை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரணிலை நீக்கி விட்டு சபாநாயகரை பிரதமராக்கும் சூழ்ச்சி- பின்னணியில் அத்துரலியே ரத்ன தேரர்?

கோத்தபாய ராஜபக்ச இக்கோரிக்கைக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றால், சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, சபாநாயகர் ஷமல் ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சூழ்ச்சியின் பிரதானியாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அத்துரலியே ரத்ன தேரரே இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துரலியே ரத்ன தேரர் அண்மையில் சபாநாயகரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இருந்தே, ரத்ன தேரர், இந்த பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதாக பேசப்படுகிறது.

அத்துரலியே ரத்ன தேரர், இதற்கு முன்னர் விளக்கமறியல் கைதியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்து அவருடனும் சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்கு அழைத்து வரும் திட்டத்தின் பின்னணியிலும் ஜாதிக ஹெல உறுமய இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, வெற்றியீட்டிய மக்கள் ஆணையை முற்றாக தலைகீழாக மாற்ற முயற்சித்தாலும் ஜனவரி 8 ஆம் திகதி வெற்றி பெற்ற மக்கள் சக்திகள் இது குறித்து அவதானத்துடனும் இருப்பதாக ஜனவரி வெற்றியுடன் சம்பந்தப்பட்ட சில தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum