Top posting users this month
No user |
Similar topics
ஜெயில் சிக்கன் கிரேவி
Page 1 of 1
ஜெயில் சிக்கன் கிரேவி
கோழி துண்டுகள்- 300கிராம்
பெரிய வெங்காயம்- 1
சின்ன வெங்காயம்- 12
தக்காளி- 1
பச்சை மிளகாய்- 4
இஞ்சி- ஒன்றரை இன்ச் துண்டு
பூண்டு- 6பல்
மிளகாய் தூள்- 2மேசைக்கரண்டி
தனியா தூள்- 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் 1தேக்கரண்டி
கறிவேப்பிலை- 2இனுக்கு
பாண்டான் இலை-பாதி
மல்லிக் கீரை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
கரம் மசாலா பொடி- 1/2தேக்கரண்டி (பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து அரைத்த பொடி)
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
கோழியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், 3/4மேசைக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தனியே மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியில் 1மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி கறிவேப்பிலை தாளித்து நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வாசனை வந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
5நிமிடம் நன்றக வதங்கிய பின் மீதமுள்ள மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பாண்டான் இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
பொடி வாசனை அடங்கியதும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து சிக்கனை வேக விடவும். (கொதிக்கும் தண்ணீர் சேர்ப்பதால் கோழி வெந்து கொண்டிருக்கும் வெப்ப நிலை ஒரே அளவில் இருக்கும்.)
இன்னொரு வாணலியில் 1மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கரகரப்பாக அரைத்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமானதும் வேக வைத்த சின்ன வெங்காயத்தை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கிளறி இந்த கலவையை சிக்கன் கலவையில் சேர்த்து கிளறவும்.
கரம் மசாலா பொடி சேர்த்து மேலும் 5 முதல் 10நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான ஜெயில் சிக்கன் கிரேவி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum