Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் கிரேவி
Page 1 of 1
சிக்கன் கிரேவி
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 3
தேங்காய்ப் பால் - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
பட்டை, சோம்பு - தாளிக்க
வறுத்து அரைக்க:
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20 - 25 (காரத்திற்கேற்ப)
தனியா - 2 தேக்கரண்டி
பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெறும் கடாயில் மஞ்சள் தூளைத் தனியாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு மிளகு, சீரகத்தையும், அதன் பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி மற்றும் பூண்டை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைக்கவும்.
ஆறியதும் அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். சிக்கனைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு சிக்கனைச் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அதனுடன் தேங்காய்ப் பாலை ஊற்றி, தேவையெனில் சிறிது தண்ணீரும் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கவும். (அல்லது குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்திருந்தும் இறக்கலாம்).
சுவையான சிக்கன் கிரேவி தயார். சிக்கனில் மசாலா நன்றாக ஊறி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். டிஃபன் ஐட்டங்களுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum