Top posting users this month
No user |
Similar topics
எந்த நாட்டில் இருந்தாலும் உதயங்க கைது செய்யப்படுவார்: வெளிநாட்டு அமைச்சு
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க, உலகில் எந்த நாடுகளில் இருந்தாலும் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேசினி கொலோன் தெரிவித்துள்ளார்.
இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரஸ்யாவின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க, உலகில் எந்த நாடுகளில் இருந்தாலும் அவரைக் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.
புதிய அரசினால் இவரது தூதுவர் பதவி இடைநிறுத்தப்பட்டது. ஆனால் இவர் இதுவரை இராஜதந்திர கடவுச்சீட்டை வெளிநாட்டு அமைச்சுக்கு சமர்ப்பிக்கவில்லை.
இந்த கடவுச் சீட்டை பயன்படுத்திய இவர் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்.
அவர் மின்னஞ்சல் ஊடாகவே தனது இராஜதந்திர கடவுச் சீட்டை ஒப்படைக்க முடியாது என அறிவித்துள்ளார். ஆனால் இவருக்கு ஏதோ ஒரு நாட்டில் இரட்டைப் பிராஜா உரிமை இருக்கக் கூடும். இவர் ஏற்கனவே கடந்த வாரம் டுபாய் நாட்டில் இருந்துள்ளார்.
இவர் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கிடங்கு கொண்ட கொள்கலனை யுக்ரேனுக்கு கொண்டு செல்வதற்கு கடந்த வாரம் முயற்சித்துள்ளார். அதற்காக ஈரான் நாட்டில் உள்ள ஒருவரை தெஹ்ரான தூதுவரலாயம் ஊடாக செயலுரிமை கடிதமொன்றை வழங்கி, கொழும்பில் உள்ள ஆயுதக் கொள்கலனை யுக்ரேன் அல்லது வேறு நாடுகளுக்கு கொண்டுவருவதற்கும் முயற்சித்துள்ளார்.
அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள தூதுவரலாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்விடயம் சம்பந்தமாக இலங்கை- இந்தியா நாடுகளுக்கான யுக்ரேன் தூதுவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கடந்த வாரம் சந்திப்பொன்றும் இடம் பெற்றது.
இது பற்றி உரிய விசாரணைக்கு ஒத்துழைப்பதாக வெளிநாட்டு அமைச்சரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களுக்குள் உதயங்க மேற்கொண்ட மற்றுமொரு ஆயுதக் கொள்கலனே கொழும்பு துறைமுகத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இருவர் விசாரணைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
உதயங்க வீரதுங்கவின் ஆயுத விற்பனை தொடர்பில் மேலும் சாட்சியங்கள்
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, 9 உக்ரைன் பிரஜைகளுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உதயங்க வீரதுங்க, உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே இன்று தெரிவித்துள்ளார்.
உதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து தூதரங்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உதயங்க வீரதுங்க ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு விஜயம் செய்து சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அவரது பொதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்வரும் வாரம் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவார்?
» சிறைக்குள் இருந்துகொண்டே வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடி! கில்லாடி ஆசாமிக்கு உதவிய பெண் கைது
» வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum