Top posting users this month
No user |
Similar topics
பாலியல் துஸ்பிரயோகங்களுக்கான பிரதான காரணம் போதை பொருள்: எம்.சி.ஸஹ்றான் தெரிவிப்பு
Page 1 of 1

பாலியல் துஸ்பிரயோகங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், மாணவி வித்யாவின் வன்புணர்வு கொலைச்சம்பவம் அனைத்துக்கும் காரணமாக இருப்பது போதை பொருள் பாவணையாகும் என தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உப தலைவரும் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகருமான மௌலவி எம்.சி.ஸஹ்றான் தெரிவித்தார்.
மாணவி வித்யாவின் படுகொலை வேண்டி நிற்கும் சமூக மாற்றங்கள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற விழிப்புணர்வுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த போதை வஸ்த்தை இலங்கையிலிருந்து ஒழிப்பதற்கு அரசாங்கம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் துஸ்பிரயோகங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் வன்புணர்வுக் கொலைகள் எந்த சமுதாயத்தில் இடம்பெற்றாலும் யாரால் இடம்பெற்றாலும் அதற்கான முதல் காரணம் போதைவஸ்த்தாகும்.
போதைவஸ்த்தை இந்த சமுதாயத்திலிருந்து ஒழிப்பதற்கு ஒவ்வொரு மத்தினரும் பாடுபட வேண்டும்.
எல்லா மதங்களுடைய அறிவுரைகளும் போதை வஸ்த்தை பாவிக்காதே என்று தான் சொலப்படுகின்றது.
அனைவரும் இந்த போதைவஸ்து பாவணைக்கு எதிராக நல்லுபதேசங்கள் செய்கின்றார்கள், பேசுகின்றார்கள், விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்கள். இது போதாது.
இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வித்யாவின் படுகொலைக்கு அடிப்படைக்காரணம் போதை வஸ்துத்தான்.
போதைபொருளை பாவித்து விட்டுத்தான் மாணவி வித்யாவை வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளார்கள் என்பதை அறிகின்றோம். இது மிகவும் கவலையான சம்பவம்.
அதிகமான வன்புணர்வுகளுக்கும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் போதை வஸதுப்பாவணை அடிப்படைக்காரணமாக உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாத்திரம் 21 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
4 ஆயிரத்து 145 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் 438 பொலிஸ் நிலையங்களில் போதை தடுப்பு பிரிவினால் இவைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கஞ்சாவுடன் சம்பந்தப்பட்ட 21 ஆயிரத்து 290 நபர்கள் ஹெரோயினுடன் சம்பந்தப்பட்ட 10 ஆயிரத்து 399 நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவருடைய அறிக்கையில் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இலங்கையில் மது பாவனையில் முதலிடத்தைப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என்பதை அறிகின்ற போது நாம் பெருமைப்பட வேண்டிய விடயமல்ல. தலைகுனிய வேண்டிய விடயம்.
போதைவஸ்துக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக சட்டங்களை இயற்றினாலும் போதைவஸ்துப்பாவணையும் அதன் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது.
இதற்கான காரணம் சட்டத்தை இயற்றுகின்ற அரசாங்கமே மறுபக்கம் போதைக்கு விளம்பரம் கொடுக்கின்றது.
இலங்கை மதுவரித்திணைக்களத்தின் இணையதளத்தை பார்த்தால் விளங்கும் இது தொடர்பான கேள்விகளை கேட்டு அவர்களே அதற்கு பதில் வழங்குகின்றார்கள்.
போதை வஸ்து குறித்து கடுமையான எச்சரிக்கைகளை செய்ய வேண்டும்.
அதன் பாதிப்பு குறித்தும், சமூகத்தில் போதையினால் ஏற்படும் சமூகச்சீரழிவுகள் குறித்தும் விழிப்புணர்வுகளை நாளாந்தம் செய்ய வேண்டும்.
போதைவஸ்துவை ஒழிப்பதில் மதங்கள் பங்களிப்பு செய்து கொண்டுதான் இருக்கின்றன என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போதை பொருள் வியாபாரிகளை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்: ஜோன் அமரதுங்க
» இலங்கையில் இன்னும் பாதுகாப்பில்லை! இந்தியாவில் உள்ள அகதிப் பெண்கள் பாலியல் அடிமைகளாக: அவுஸ்திரேலிய கூட்டத்தில் தெரிவிப்பு
» போதை குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum