Top posting users this month
No user |
Similar topics
வட மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம்! பா.உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை
Page 1 of 1

வடக்கு மாகாணத்தில் ஒரு தொகுதி முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவக்கட்டமைப்பின் கீழும் இன்னொரு பகுதியினர் குறைந்த அளவு ஊதியத்துடன் பலர் ஊதியங்களுமின்றியும் வலயக்கல்விபணிமனை நிர்வாகத்தின் கீழும் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இராணுத்துணைப்படையின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் உள்ள விடயங்கள் வருமாறு
முன்பள்ளி ஆசிரியர்களின் நியமனம்.
கிளிநொச்சி மாவட்டம்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களில் அரைப்பங்கினரை இராணுவத் துணைப்படையாக நியமித்து இராணுவ நிர்வாகத்தின் கீழ் முன்பள்ளிகளில் கற்பிப்பதற்கு கட்டாயப்படுத்துவது தொடர்பில் 2015.01.28ம் திகதிகடிதம் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். போரினால் பாதிக்கப்பட்ட எமது மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வடக்கு மாகாண கல்வி நிர்வாகத்தின் கீழ் கிடைக்கும் என்ற அவாவுடன் தங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். ஆனால் கடந்த 2015.05.31ம் திகதிதங்களால் பொலநறுவையில் வைத்து இம்மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் துணைப்படைக் கட்டமைப்பின் கீழ் நிரந்தர நியமனங்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பது கவலையையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
தங்களது நல்லாட்சி அரசாங்கத்தில் நீங்கள் முன்னெடுத்துள்ள பல அணுகுமுறைகள் எமதுமக்கள் மத்தியில் தங்கள் மேல் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையில் எந்தமாவட்டத்திலும் இல்லாத ஒருபுதிய அணுகுமுறை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மட்டும் எமது சின்னஞ் சிறு பாலர்களுக்கு கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவத் திணைக்களத்தின் கீழ் நியமனம் வழங்குவது கடந்த அரசாங்கத்தின் இராணுவச் சர்வாதிகாரப் போக்கை மாற்றம் இன்றி அடையாளப்படுத்துவது போல் தமிழ் மக்கள் உணருகிறார்கள். உளவியல் ரீதியாக பாலர்கள் இயற்கையான சூழலில் மகிழ்ச்சியான கற்பித்தலைப் பெறவேண்டும். இவர்கள் இராணுவச் சூழலுக்கு கொண்டு வரப்படுதல் ஆபத்தானது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
முன்பள்ளி நிர்வாகம் என்பது வடக்கு மாகாணசபைக்கு பகிரப்பட்ட அதிகாரத்தின் கீழ் உள்ள நிலையில் இராணுவப்பிடியில் முன்பள்ளிகளை நடாத்துதல் கல்வி உளவியல் ரீதியாக மிக ஆபத்தானதாகும்.
அத்தோடு வடக்குமாகாணத்தின் அதிகார, நிர்வாக நடவடிக்கைகளையும் இந்நியமனம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எனவே பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கிய இராணுவப்பயிற்சியை நிறுத்தியமை, அதிபர்களுக்கு வழங்கிய இராணுவப் பதவிகளை மீளப்பெற்றமை, தங்களை உச்சமான ஜனநாயகத் தலைவராக காட்டியது போல், இம்முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதே சம்பளத்துடன் வடக்கு மாகாண கல்வி நிர்வாக மேற்பார்வையின் அதிகாரத்தின் கீழ் நியமனம் கிடைக்க உதவுமாறுபணிவுடன் வேண்டுகிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடமேல் மாகாண சபை மைத்திரி ஆட்சியின் கீழ்
» ஐ.தே.கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் காவல்துறையினரிடம் சரண்
» தென் மாகாண சபை உறுப்பினர் வாகன விபத்தில் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum