Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த ராஜபக்ச தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றார்: அ.அமிர்தலிங்கம் குற்றச்சாட்டு

Go down

மகிந்த ராஜபக்ச தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றார்: அ.அமிர்தலிங்கம் குற்றச்சாட்டு Empty மகிந்த ராஜபக்ச தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றார்: அ.அமிர்தலிங்கம் குற்றச்சாட்டு

Post by oviya Tue Jun 02, 2015 2:49 pm

இரு முறை பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்ப்பேசும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தான் அரசியலில் தோல்வியடைந்த நாள் முதல் தனது சகாக்களுடன் பரப்பி வருகினறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்புணர்வு கொலை சம்பந்தமான அனுதாப பிரேரணையும், கண்டனத்தீர்மானமும் கல்முனை மாநகரசபையில் நடைபெற்ற மாதாந்த சபையமர்வின்போது மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களால் கொண்டுவரப்பட்டது.

இப்பிரேரணையை முன்மொழிந்த எதிர்க்கட்சித்தலைவர் தனது உரையின்போது அண்மையில் யாழ் புங்குடுதீவுப்பகுதியில் காமுகர்களால் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்த சம்பவமானது மனவேதனையும் இதயத்துடிப்பு நிற்கும் அளவு நிறைந்ததாகும்.

இச்சம்பவத்தினை இச்சபையின் கௌரவ முதல்வர், கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் இதயம் திறந்து ஆதரிக்கவேண்டும்.

இத்தோடு வித்தியாவின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எமது இதயத்துடிப்புள்ள அனுதாபங்கள் எனவும் தெரிவித்தார்.

யாழ் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் ஒப்பிட்டு இலங்கையில் ஒரு இனவாதக்கும்பல் இனவாதத்தினை தூண்டும் கருத்துக்களை பரப்பி வருவதனை நாங்கள் அனைவரும் அறிவோம்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிழக்கில் அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்திருந்த போது இங்கு உரையாற்றுகையில் தற்போது வடக்கில் சட்டம் ஒழுங்கு துஸ்ப்பிரயோகம் செய்யப்படுவதாகவும் தான் ஆட்சியில் இல்லாத காலத்தில் தமிழ் மக்கள் மெல்ல மெல்ல கிளர்ந்தெழுந்ததாகவும் என்ற தொனியில் இனவாதத்தினை கக்கியிருந்தார்.

அதே நாளில் அவருடைய கட்சியை சார்ந்த செயலாளர் சுசில் பிரேமஜயந்த யாழப்பாணத்தில் வைத்து உரையாற்றும்போது யாழ் மக்கள் எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்து தருமாறு யாழ் தமிழ்மக்களிடம் வினயமாக கேட்டிருக்கின்றார்.

மாறாக ஓர் அப்பாவி மாணவியின் வன்புணர்வு கொலை தொடர்பான கண்டன அறிக்கையோ அனுதாப அறிக்கையைக்கூட வெளியிடமுடியாமல் இம்மாணவியின் சடலத்தினை காட்டி இனவாத அரசியலை முன்னால் ஜனாதிபதியும், அவரது சகாக்களும் மக்கள் மத்தியில் விசமப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடியியல் உரிமைச்சட்டத்தினை தமிழ்த்தலைவர்கள் எதிர்க்கவில்லையா?

கொப்பேக்கடுவ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது அவரை ஆதரிக்கவில்லையா?

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது வடக்குக்கிழக்கு தமிழ்மக்கள் அவரை முற்றுமுழுதாக ஆதரிக்கவில்லையா?

எமது கட்சியின் அன்றைய தலைவரும் ஸ்தாபகருமான தந்தை செல்வா தொடக்கம் இன்றைய பெரும் தலைவர் இரா.சம்பந்தன் வரைக்கும் கூறும் விடயம் ஐக்கிய இலங்கைக்குள் அமைதியான முறையில் தமிழ், சிங்கள, முஸ்லிம், இனங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே.

கடந்த காலங்களில் இடதுசாரிகள் என்றழைக்கப்படுபவர்களான கொல்வின் ஆர்.டி.சில்வா, பீற்றர் கெனமன், என்.எம்.பெரேரா, வாசுதேவ நானயக்கார போன்ற இடதுசாரித்தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான உரிமைப்போராட்டத்திற்கு இலங்கை அரசியலில் உறுதுணையாகவே இருந்து செயற்பட்டார்கள்.

ஆனால் இன்று வாசுதேவ நானயக்கார போன்ற தலைவர்கள் இனவாதக்கும்பலோடு சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான இனவாதக்கருத்துக்களை கக்குகின்றார்கள்.

இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்களான டி.எஸ்.சேனாநாயக்கா, டட்லி சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, தஹாநாயக்க, பிரேமதாஸ, டி.பி.விஜயதுங்க, போன்ற தலைவர்கள் இந்த நாட்டிலே மூவின மக்களும், நால்வகை மதத்தினரும் அவரவர் கலாசார விழுமியங்களுடன் அமைதியாக வாழவேண்டும் என விரும்பினார்கள்.

ஆனால் இரண்டு முறை பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்ப்பேசும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தான் தோல்வியடைந்த நாள் முதலே பரப்பி வருகின்றார்.

இலங்கை திருநாட்டை நேசிக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த கல்விமான்கள், புத்திஜீவிகள் இந்நாட்டின் மீது எம்முடைய தாய்நாடு என்ற பற்றுறுதியுடன் கூட்டாக அமைதியாக வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கிய இன்றைய மான்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய ஆட்சியில் அமைதியைக்கான விரும்புகின்றோம்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு எந்தவித ஆடம்பரங்களும் இன்றி உடனடியாகச் சென்று வித்தியாவின் பெற்றோரை சந்தித்து அவர்களுடன் உரையாடி அனுதாபம் தெரிவித்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன்,

தமிழ் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையினையும் கவனத்தில் எடுத்து அவருடைய தலைமையில் தீர்த்து வைப்பதற்கு ஆவண செய்து தரவேண்டும் எனவும் கூறினார்.

அவரால் கொண்டுவரப்பட்ட வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரேரணை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum