Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திரிசங்கு நிலையில் மஹிந்த

Go down

திரிசங்கு நிலையில் மஹிந்த Empty திரிசங்கு நிலையில் மஹிந்த

Post by oviya Sun May 31, 2015 3:16 pm

ஐந்து மாதங்களுக்கு முன்னர், ஜனநாயக ரீதியில் மக்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலில் களம் இறங்கத் தயாராகியிருக்கிறார்.
ஜனவரி 8ம் திகதி நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்து வெளியேறிய பின்னர், அவர் ஒரு சில வாரங்கள் தான் அமைதியாக இருந்தார். அதன் பின்னர் அவர் தனது அரசியல் மறுபிரவேசத்துக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்.

ஊடகங்களுக்கான பேட்டிகள், விகாரைகளில் வழிபாடு என்ற பெயரில், ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்தல் போன்றவற்றில் ஈடுபாடு காட்டி வந்த அவர், தாம் அரசியலில் இருந்து விலகவில்லை என்றும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறி வந்தார். அவர் அரசியலை விட்டு வெளியேறவில்லை, வெளியேறப் போவதுமில்லை என்பது உறுதியான விடயம்.

இந்தநிலையில், மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பாக அவர் சூசகமான கருத்துக்களை வெளியிட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்திருந்தார்.

அவரது இந்த அரசியல் மறுநுழைவு பற்றிய சூசகமான கருத்துக்கள் இறுதிக் காலகட்டத்தை எட்டியுள்ளன என்பதையே அவரது இப்போதைய கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அவர் பகிரங்கமாகவே அறைகூவல் விடுத்திருக்கிறார்.

இப்போது அவசரமான காரியம், ஆட்சியை மாற்றுவதே என்றும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றால் அதன் அர்த்தம், விரைவில்தான் ஆட்சியைப் பிடிப்பேன் என்பதுதான். அதையே அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதைவிட, தான் ஆட்சியில் இல்லாத நான்கு மாதங்களுக்குள் கொழும்பு குப்பையாக மாறிவிட்டதாகவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

அதைவிட, வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, தனக்கு நெருக்கமானவர்களிடம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, மஹிந்த ராஜபக்சவின் அரசியல் மீள் நுழைவுக்கான காலகட்டம் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவார் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.

ஏனென்றால், அவர் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவிக்கவேயில்லை.

தான் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகத் தான் கூறியிருந்தார். எனவே மீண்டும் அவர் களமிறங்குவார் என்பது உறுதியாகவே தெரிந்தது. ஆனால், அது எப்போது, எப்படி என்பது தான் தெரியாத விடயமாக இருந்தது.

எவ்வாறாயினும் அவரது அரசியல் மீள்நுழைவு பாராளுமன்றத் தேர்தலுக்குள் நிகழ்ந்தாக வேண்டும். ஏனென்றால், பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டுத் தெரிவானால் தான், பிரதமர் பதவியைக் கைப்பற்ற முடியும்.

நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இரண்டு முறை இருந்தவர் வெறும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

அதன் ஊடாக, பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்காகவே களமிறங்க வேண்டும்.

இப்போது கூட, மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலில் நுழைவது அவ்வளவாக விரும்பத்தக்க ஒன்றாக இருக்காது.

ஏனென்றால், இவர் இதற்கு முன்னர் வகித்த பதவி அந்தளவுக்கு உயர்வானது, அதிகாரம் மிக்கது.

இப்போது, அவர் மீண்டும் அவரால், அந்தளவுக்கு உயரமான பதவியை எட்டமுடியாது. ஆனாலும், இருப்பதில் உயர்வான பதவி கிடைத்தால் போதும் என்ற வகையில், எப்படியாவது பிரதமர் பதவிக்காகவே களமிறங்கத் தயாராகி வருகிறார்.

பிரதமர் பதவிக்கு களமிறங்குவதானால், முதலில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

இன்னும் சில மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடக்கப் போவது உறுதியாகி விட்டதால், மஹிந்த ராஜபக்ச எப்படியாவது கூடிய விரைவில் அரசியல் பிரவேசத்தை அறிவித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார்.

கிட்டத்தட்ட அதற்கான இறுதி நேரத்தை தொட்டுவிட்டார் என்று கூடச் சொல்லலாம்.

ஆனாலும் அவருக்கு இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், எவ்வாறு பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவது என்பதுதான்.

தான் மீண்டும் அரசியலுக்கு வருவதானால், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூலமே என்று மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இருந்தாலும், இந்த வழியாக அவர் பிரதமர் வேட்பாளராக அரசியலுக்குள் நுழைவது தான் சிக்கலானது, சிரமமானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக எந்தளவுக்கு வலுவான ஒரு அணி இருக்கிறதோ, அதுபோலவே, அவருக்கு எதிரான வலுவான அணி ஒன்றும் இருக்கிறது.

சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, போன்றவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான அணியில் இருக்கின்றனர்.

இதைவிட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில்தான் கட்சியின் தலைமைப் பதவியும் இருக்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக 90 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்கள் நினைத்தவாறு, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது.

அதைச் செய்ய வேண்டியவர் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன மட்டும் தான். ஆனால் ஜனாதிபதியோ பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

ஏனென்றால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதை அவர் விரும்பவில்லை என்பதும், மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு வந்தால் நாட்டின் நிலை என்னவாகும் என்பதையும் அவர் நன்கறிவார்.

மேலும் கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

மேலும் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகக் கூறியுள்ளார்..

அது மாத்திரமன்றி, மஹிந்த ராஜபக்ச ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து விட்டார் என்றும், எனவே அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என்றும், புதியவருக்கே இடமளிக்க முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன பல தடவைகள் வெளிப்படையாகவே கூறிவந்தார்.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல், ஒரு பாராளுமன்ற ஆசனத்துக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவது மஹிந்த ராஜபக்சவுக்கு கௌரவக் குறைவாக இருக்கும்.

இதேவேளை, பிரதமர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி அறிவிக்க மறுத்து விட்டதால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியும் அவருக்கு இருக்கிறது.

அதற்கும் சில தெரிவுகள் இருக்கின்றன.

வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது அதில் ஒன்று.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச, மக்கள் ஐக்கிய முன்னணியின் வண்டிச் சக்கரம் சின்னத்தில் போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகின. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. கங்காரு, புறா போன்ற சின்னங்களில் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் மஹிந்த ராஜபக்சவோ எதற்கும் பிடிகொடுக்காமலே பதிலளித்து வந்தார். இப்போதைய நிலையில், சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால், அவருக்கு இருக்கின்ற தெரிவு பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னம் தான்.

அது சந்திரிகா குமாரதுங்க உருவாக்கிய கூட்டணியாக இருந்தாலும், அதன் பொதுச் செயலாளராக இருப்பவர், மஹிந்தவின் சொல்லைத் தட்டாமல் கேட்கக் கூடிய முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தான்.

எனவே கதிரைச் சின்னத்தின் ஊடாகப் போட்டியிடுவது அவருக்கு சிரமமாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

அவ்வாறு வேறொரு கட்சியின் சின்னத்தில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவதானால், சுதந்திரக் கட்சி உடைந்துவிடும்.

அது மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆசனத்தில் அமர வைக்கும் அளவுக்கு வெற்றியைத் தேடித் தராது.

எனவே, சுதந்திரக் கட்சியை உடைத்து, வேறொரு சின்னத்தில் போட்டியிட மஹிந்த முனைவாரா என்பது சந்தேகம்தான்.

அவ்வாறு வேறொரு சின்னத்தில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தால், அவர் இரண்டாவது தோல்வியை எதிர்கொள்ள நேரிடும்.

அது அவரது அரசியல் எதிர்காலத்தை இருண்டதாக்கி விடும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum