Top posting users this month
No user |
பந்துல விடுத்த சவாலை ஏற்றுக்கொள்ளும் ஹர்ஷ டி சில்வா
Page 1 of 1

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் தொடர்பில் கலந்துரையாட தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விடுத்த சவாலை, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஏற்றுக்கொண்டுள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனும் நிதித்தொடர்பில் போலியான தகவல்களை வழங்கி வருவதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அல்லது கொள்கை திட்டமிடல் துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு பந்துல சவால் விடுத்திருந்தார்.
இந்த சவால் குறித்து பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கும் எனக்கும் ஒரே நாளில் விடுமுறை கிடைக்கும் போது முழு நாட்டிற்கும் தெரியும் வகையில், நாட்டு பொருளாதாரம் குறித்து விவாதத்திற்கு செல்வோம் என எனது நண்பர் பந்துல குணவர்தனவிற்கு நேற்றே கூறிவிட்டதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெறுமனே சவால் விடுத்துக்கொண்டிருக்காமல் பகிரங்கமாக விவாதத்திற்கு வரவும் இதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
கடந்த 20 வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை பின் தள்ளிவிட்டு 100 நாட்களில் அதனை நிவர்த்தி செய்ய முடியவில்லை என குறிப்பிடுகின்றார்கள்.
நானும் இது குறித்து விவாதிப்பதற்கான சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன் என ஹர்சா டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum