Top posting users this month
No user |
Similar topics
கஸ்டர்ட் குக்கீஸ்
Page 1 of 1
கஸ்டர்ட் குக்கீஸ்
உப்பில்லாத வெண்ணெய் - 250 கிராம்
மைதா - 250 கிராம்
கஸ்டர்ட் பவுடர் - 150 கிராம்
சர்க்கரைத் தூள் - 150 கிராம்
முட்டை - ஒன்று
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
முட்டையை அடித்து தனியாக வைக்கவும். பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரைத் தூளையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் க்ரீம் போல் கலக்கவும். அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்து கலக்கவும்.
முட்டையைச் சேர்த்து நன்றாகக் கலந்த பிறகு மைதாவையும், கஸ்டர்ட் பவுடரையும் சேர்த்து கலக்கவும். (கலந்ததும் சப்பாத்தி மாவு போல இருக்கும்).
பிறகு மாவை சிறு உருண்டையாக உருட்டி சர்க்கரைத் தூளில் பிரட்டியெடுத்து ட்ரேயில் அடுக்கவும்.
உருண்டைகளின் மீது ஃபோர்க் கொண்டு அழுத்தவும். இவ்வாறு அழுத்துவதால் வட்ட வடிவ பிஸ்கட் போல் இருக்கும். பிறகு மைக்ரோவேவில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும், வெந்ததும் சிறிது நேரம் ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
டேஸ்டி கஸ்டர்ட் குக்கீஸ் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum