Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டம் மீதான நம்பிக்கை இழப்புக்கு காரணங்கள் என்ன?

Go down

சட்டம் மீதான நம்பிக்கை இழப்புக்கு காரணங்கள் என்ன? Empty சட்டம் மீதான நம்பிக்கை இழப்புக்கு காரணங்கள் என்ன?

Post by oviya Sat May 30, 2015 12:08 pm

இந்தநாட்டில் ஒருகால கட்டத்தில் இரு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாவது தமிழ்த் தேசிய கீதம் இசைத்தமைக்காக கிழக்குப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் ஒரு உத்தியோகத்தரைத் தாக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் சட்டத்தரணிகள் இவர்களை விடுவிக்க அரும்பாடு பட்டுள்ளனர். புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுபாலியல் வன்முறைக்குப் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது விடயத்தில் பொலிஸாரும் சட்டத்துறையினரும் நடந்து கொண்ட விதத்தை ஆட்சேபித்து யாழ் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது வன்முறைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் 130 பேர் அநுராதபுரச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் விடுவிக்க தாம் முயற்சிக்கப் போவதில்லை எனயாழ் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

நெடுந்தீவில் 2012 ஆம் ஆண்டு மீன் வாங்கச் சென்ற 13 வயதுச் சிறுமி யேசுதாசன் லக்சினி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு, மண்டைதீவில் 4 வயதுச் சிறுமி பாலியல் வன்முறைக்குப் பின் படுகொலை செய்யப்பட்டமை, உரும்பிராயில் சிறுவர் காப்பகத்தில் இருந்த சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை போன்ற வழக்குகளில் சந்தேகநபர்கள் சார்பில் வாதாடி அவர்களை விடுதலை செய்யத் துடிக்கும் யாழ் சட்டத்தரணிகள்,

ஆவா குழு போன்ற காடையர்களை விடுவிக்க இரவிரவாக சட்டப் புத்தகத்தினுள் தலையை ஓட்டி வழி கண்டுபிடிக்கும் வழக்கறிஞர்கள், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் போராட்டத்தை திசை திருப்ப முயற்சித்த சக்திகளின் வழிகாட்டலில் புரிந்த தவறுகளை மன்னிக்கத் தயாராக இல்லை.

பளபளக்கும் மொட்டைக்கு ஆசைப்பட்டால் அலங்காரக் குடுமி பற்றிய ஆசையைத் துறக்க வேண்டும். காடைத் தனங்களுக்கு எதிராக தொலைக்காட்சியில் றெமிடியஸ் பொங்கியெழும் போது அதைக் கேட்போருக்கு மயிர்க் கூச்செறியும்.

இனத்தின் பண்பாடு நாகரிகம் பற்றி மேடையில் சிறீகாந்தா பேசும் போது அவரது இலக்கத்தைத் தெரிந்து அவருக்கு ஒருவிருப்பு வாக்குத் தானும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

ஒருபக்கத்தில் எமது மக்களின் மீட்பர்களாகக் காட்சியளிக்கும் இந்த இருவரும் மறுபுறத்தில் காடையர்களையும் காமுகர்களையும் காப்பாற்றத் தமது சட்ட அறிவைப் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் முதலில் முடிவெடுக்க வேண்டிய விடயம் எமது தலைவர்கள் என்ற முகமூடியைப் போடப் போகின்றார்களா அல்லது காடையர்கள் காமுகர்கள் பக்கம் நிற்கப் போகின்றார்களா என்று.

மக்களின் ஆத்திரத்துக்குக் காரணம் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சுவிஸ் குமார் எப்படி கொழும்புக்குத் தப்பமுடிந்தது என்பதுதான்.

இவரைத் தப்பிக்க வைத்ததில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறனின் பங்கு குறித்துமக்கள் சீற்றமடைந்துள்ளனர்.

இந் நிலையில் சட்டவிரிவுரையாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

அப்படியானால் சட்ட விரிவுரையாளரையும் கைது செய்வதாக எழுத்து மூலம் பொலிஸார் வாக்குறுதி கொடுத்தது ஏன்? யாழ் வைத்தியசாலையில் இருந்து குமார் கொழும்புக்கு கொண்டு செல்ல சட்டத்தின் ஓட்டையா. பொலிஸாரின் சட்ட ஓட்டையா காரணம் என எவரும் சிந்திக்கக் கூடாது. அப்படிச் சிந்தித்தால் மகிந்த, விமல் வீரவன்ச ஜாதிக ஹெல உறுமயவின் கோபத்துக்கு ஆளாக வேண்டும்.

பல காரணங்களின் நிமித்தம் அன்றும் இன்றும் பொலிஸாருடன் ஒத்துழைப்பது எமது மக்களுக்குச் சற்றுச் சிரமமாகவே இருக்கிறது என வடக்கு முதல்வர் கூறுவது இவ்வாறான காரணங்களால் தான். இதே நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச் சூழலில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.

நாவற்குழியைச் சேர்ந்த பரராசா என்னும் இளைஞன் 76—77 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் செம்மணியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வேலைக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இந்த இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிக்கு இரையானான். இவரது மரணம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அச் சமயம் கொழும்பில் இருந்து பலாலிக்கு விமானம் மூலம் வந்த விசேட அதிகாரி ஒருவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவொன்றை நீதிபதியிடம் கையளித்தார்.

இவ் வழக்கை கைவிடுமாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே சட்டமாஅதிபரின் வழிகாட்டுதலின் படி இந்தவழக்கைக் கைவிடுகின்றேன் என்று அர்த்தப்பட கூறிய நீதிபதி அந்தக் கொலைகார பொலிஸாரை விடுவித்தார்.

விடுவிக்கப்பட்ட அந்தக் கொலைகாரனை இதே நீதிமன்ற வளாகத்தில் தமது தோளில் சுமந்து கொண்டு வெற்றி முழக்கமிட்டவாறு ஊர்வலம் சென்றனர் சக பொலிஸார்.

உங்களது நீதிமன்றம் எங்களுக்கு ஒருபொருட்டல்ல எமக்கு விடுதலை கொழும்பில் இருந்தே கிடைக்கும் என்பதுதான் அந்த ஊர்வலமும் கோசமும் சொன்ன செய்தி.

அந்தச் சம்பவம் தான் சிறீலங்கா நீதிமன்றில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்ற அழுத்தமான செய்தியை அன்றைய தமிழ் இளைஞர்களுக்குப் புலப்படுத்தி அவர்களை மாற்றுவழியை நாடச் சொன்னது.

சமூக நலன்சார் விடயங்களை யாரும் எங்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. எமது சமூகப் பொறுப்பை நாங்கள் அறிவோம்.என்று கடந்த 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சீறியெழுந்த சட்டத்தரணி சிறீகாந்தாவால் அன்று கொதித்தெழ முடியவில்லை.

இதே நீதிமன்றில் தான் அவர் வழக்குகளுக்காக ஆஜராகி வந்தார். வெறுமனே விரலைச் சூப்பிக் கொண்டு நிற்கத்தான் அவரால் முடிந்தது. இதே நீதிமன்றில் சாவகச்சேரியில் துப்பாக்கி மூலம் வன்முறை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இராமநாதன் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் எ னநீதவான் உத்தரவிட்டார்.

ஆனால் அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படாமலேயே நீதிமன்ற வாசலில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையெல்லாம் காணும் போதுசட்ட ஒழுங்கு பற்றி மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும். நீதிமன்றத்தில் நிகழ்ந்த வன்முறையை எவரும் ஆதரிக்கவில்லை.

இச் சம்பவம் தொடர்பாக எமது சமூகம் விசனம் தெரிவிக்கிறது. அதில் எவருக்கும் மாறுபாடான கருத்து இருக்க முடியாது. ஆனால் மக்கள் போராட்டங்கள் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றன என்பதை இச் சட்டமேதைகள் ஆராய்தறியவில்லை.

நெல்லியடியில் நடைபெற்ற மக்கள் போராட்டம் ஒன்றின் போது புலிக்கொடியைத் தாங்கியவாறு இருவர் போனார்களே அவர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை. என்று இந்த சட்டமேதைகள் சிந்தித்திருந்தால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த இளைஞர்களுக்கு முன்னால் இந்த வன்முறையை ஆரம்பித் துதூண்டிவிட்டவர்கள் யார் அவர்களது நோக்கம் என்ன என்று புரிந்திருக்கும்.

பிந்துறுவெல–மைலந்தனை முதலான படுகொலைகளைப் புரிந்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க இந்த நீதிமன்றங்களால் முடியாது என்ற கசப்பான உண்மைதான் பவித்திராவின் வழக்கிலும் நீதி கிடைக்காது என்ற ஒரு தவறான முடிவுக்கு இளைஞர்களைச் செல்லவைத்துள்ளது.

அதற்கு ஏற்றாற் போல ஒரு பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளரே குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இருந்தமை சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்க காரணமானது என்பதுதான் உண்மை.

மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பது நிலைமைகளை மேலும் மோசமாக்கும் எனப் பிரதமர் ரணில் கூறுகிறார். இதேவேளை பிரதமர் இன்று நீதித்துறையை விமர்சித்து வாய்மூலம் கற்களை வீசிக் கொண்டிருக்கையில் வடக்கில் உண்மையாக மக்கள் நீதிமன்றம் மீது கற்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா கூறுகிறார்.

கோத்தபாயவின் விடயத்தில் ரணில் நடந்துகொண்டமுறையையே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். எனவே பிரதமரும் சரி யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களும் சரி நீதித்துறையை மதிக்கவில்லை.

இதில் ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்க நினைப்பது ஏன்? ஏற்கனவே உயர்நீதிமன்றை அவமதித்ததாக எஸ்.பிதிஸநாயக்க தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

வன்முறையைத் தூண்டிவிட்டோருக்கு வடக்கு முதல்வர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனவருத்தத்தால் வாடும் மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்வதற்கு எத்தனிக்காதீர்கள். அவ்வாறு நீங்கள் செய்வது கண்டு அறியப்பட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த அவரது கருத்துக்களுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.

எமது கவலை என்னவெனில் கொழும்பை வதிவிடமாகக் கொண்டு வாழ்ந்த எமது முதல்வர் யாழ் மக்களை புரிந்து கொண்டளவுக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்த எமது சட்டத்தரணிகள் புரியவில்லையே என்பதுதான்.

அதனால் தானோ என்னவோ எமது முதல்வருக்கு லட்சக்கணக்கில் வாக்களித்த மக்கள் சில போராளிகளையும் விடுவித்த வரலாற்றைக் கொண்ட றெமிடியஸ்சை கடந்த தேர்தலில் பரிதாபமாகத் தோற்க வைத்துள்ளனர்.

எது எவ்வாறெனினும் சிங்களத்தில் தேசியகீதம் இசைக்காமைக்கா கதமிழ் உத்தியோகத்தரைத் தாக்கிய சிங்கள மாணவர்கள் செய்த தவறு, நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களின் தவறுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல.

தவறான வழி நடத்தப்பட்ட எமது இளைஞர்களை விடுவிக்க காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புவோமாக.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum