Top posting users this month
No user |
Similar topics
வித்தியாவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலகம் விளைவித்தோரை தேடும் பொலிசார்
Page 1 of 1

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வீதிகளில் ரயர்களை கொழுத்தியோர், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தோர், நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தியோரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த 14ம் திகதி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை அறியக்கிடைத்ததன் பின்னர் தீவகத்திலும் தொடர்ந்து யாழ்.குடாநாட்டிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பெருமளவு ரயர்கள் வீதிகளில் போடப்பட்டு தீயிடப்பட்டிருந்தன.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இளைஞர்களையும், பின்னர் யாழ்.நகரில் 19ம் திகதி இடம்பெற்ற திடீர் கடையடைப்பின் போது பல தனியார் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களுக்குள் மக்களும், வர்த்தக நிலைய பணியாளர்களும் இருந்த நிலையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், தாக்குதலும் நடத்தப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் பல வர்த்தக நிலையங்களில் இருந்த இரகசிய கமராக்களில் பதிவாகியுள்ளது.
இவ்வாறான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வர்த்தக நிலையங்களிடமிருந்து பொலிஸார் தொடர்ச்சியாக பெற்றுக் கொண்டுள்ளதுடன், அவற்றை பிரதி எடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையினை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் நீதிமன்ற கட்டடம் மீதான தாக்குதலில் தொடர்புடைய பல இளைஞர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கோண்டாவில், கொக்குவில் மேற்கு யாழ்.கரையோரப்பகுதி உள்ளிட்ட இடங்களில், சிவில் உடைதரித்த மற்றும் சீருடை அணிந்த பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் காண்பிக்கப்பட்டு இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தில் கைதான 130 பேரில் பல பாடசாலை மாணவர்கள் மற்றும் அப்பாவிகள், உள்ள நிலையில் உண்மையான குற்றவாளிகளை தேடிக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்நடவடிக்கை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்.நகர்புற பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் பவள் கவசவாகனங்களில் விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு
» காலியில் மகிந்தவுக்கு ஆதரவான கலந்துரையாடல்!
» மனித மிருகங்களுக்கு மரணம் வேண்டும்: வித்தியாவிற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum