Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை: இலக்குகள் ஆறுடன் நிறைவுகண்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு

Go down

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை: இலக்குகள் ஆறுடன் நிறைவுகண்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு Empty தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை: இலக்குகள் ஆறுடன் நிறைவுகண்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு

Post by oviya Thu May 28, 2015 2:42 pm

நீதியினை வென்றடைவதற்கான ஆறு இலக்குகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை அமர்வு எழுச்சிபூர்வமாக நிறைவுகண்டுள்ளது.
மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக இந்த அமர்வு ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிஸ். நோர்வே. பிரித்தானியா என புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கெடுத்திருந்தனர்.

அரசவைத் தலைவர் முனைவர் தவேந்திராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த அரசவை அமர்வினை, பிரதமர் அலுவலக தலைமைச் செயலர் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் வலுவூட்டியிருந்தார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் நியூயோர்க்கில் இருந்து இணையப் பரிவர்த்தனையூடாக, காணொளியூடாக பங்கெடுத்திருந்தார்.

பின்வரும் இலக்குகளை எட்டும் வகைகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தொடரும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அமர்வின் நிறைவுரையில் தெரிவித்திருந்தார்.

1. தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப் பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அனைத்துலக அங்கீகாரத்பை; பெற உழைத்தல்.

2. சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கு எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையும் எனும் நிலைப்பாட்டுக்கு அனைத்துலக அங்கீகாரத்தினை பெற உழைத்தல்.

3. இனஅழிப்பைத் தடுப்பதற்குரிய பரிகாரநீதி என்பதன் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தனிநாட்டு நிலைப்பாட்டினையும் உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதற்காக உழைத்தல்.

4. சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த உழைத்தல்.

5. ஈழத் தமிழர் தேசத்தை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தளங்களில் வலுப்படுத்த உழைத்தல்.

6. உலகில் வாரும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழ் மக்களை உலகில் ஒரு வலுமையமாக ஆக்க உழைத்தல்.

மூன்று நாள் அமர்வின் உள்ளடகம்:

சிறப்பு அதிதிகள்:

சுவீடன் பல்கலைக்கழக பேராசிரியர் பீற்றர் ஷால்க், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வணக்கத்துக்குரிய இம்மானுவல் அடிகளார், பிரான்சின் பிரபல சட்டவாளர் ஜில் பிக்குவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கெடுத்து கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

தமிழர் தேசத்தின் அரசியல் இராஜதந்திர வழிமுறையிலான போராட்டத்தை வலுப்படுத்தத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு துணை செய்யும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது தொடக்க நாள் உரையில் தெரிவித்திருந்தார்.

அரசவை அமர்வு:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மனியின், கீழ் மற்றும் தென் மாநிலங்களுக்கான (டீayern, Baden-Wurttemberg, Hessen, Rheinland-Pfalz, Saarland)) அரசவைப் பிரதிநிதியாக திரு.குலசேகரம் குலதீபன் அவர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

அமைச்சர்கள் மற்றும் மையங்களின் தலைவர்கள் தங்களது செயற்பாட்டுக்கான அறிக்கையினை சபையில் சமர்பித்திருந்ததோடு பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழகத்துக்கும் புலத்துக்கும் இடையிலான உறவுகளை பன்முக தளத்தில் வளர்த்தெடுத்தல், சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை தொடர்பிலான விவாதம் இடம்பெற்றிருந்தது.

பொது அரங்கு:

பொதுமக்கள் சமூக-அரசியற் ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்ததான பொது அரங்கில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம், அனைத்துலக சமூகமும் பொதுசன வாக்கெடுப்பும் ஆகிய தலைப்புக்களில் கருத்துரைகள் இடம்பெற்றிருந்தன.

ஊடகவியலாளர் சுதன்ராஜ், பொறியிலாளர் நடேசன் மற்றும் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா ஆகியோர் பங்கெடுத்திருந்த பொது அரங்கில் நடனம் மற்றும் கவிதை ஆகியன இடம்பெற்றிருந்தன. பொதுமக்களும் தங்கள் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

கருத்தாடல் களம்:

சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தல் மற்றும் ஈழத்தமிழர்களது அரசியற் தீர்வுக்கான பொறிமுறையாக பொதுன வாக்கெடுப்புக்கான ஏதுநிலை குறித்து கருத்தாடல் களம் அமைந்திருந்தது.

நிறைவரங்கு:

ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம், Yes to Referendum அரசியல் இயக்கம், நிலக் கபளீகர எதிர்ப்பியக்கம், பதிப்பகம், ஆவணக்காப்பகம், தமிழ்க் கல்வி மேம்பாட்டு மதியுரைப்பீடம், உலகத் தமிழர் பல்கலைக் கழகம், மாவீரர் நினைவாலயம், இந்தியாவில் தோழமை மைய பணிமனைகள், நல்லெண்ணத் தூதுவர்கள், மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் மையங்கள், தாயகத்தில் சுயதொழில் வளர்ச்சித் திட்டங்கள், பசுமையைக் காப்போம் - சூழல் விழிப்புணர்வு இயக்கம் உள்ளடங்கலாக 15 செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அமையும்.

இப் பெரும் செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த நாம் திட சங்கற்பம் பூண்டுள்ளதையும் இவ் அமர்வு வெளிப்படுத்தியிருக்கிற என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது நிறைவுரையில் தெரிவித்திருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum