Top posting users this month
No user |
Similar topics
தென்னாபிரிக்க அரசும் - புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் சந்திப்பு
Page 1 of 1

தமிழ் மக்களின் வரலாற்றில் மே மாதம் தாங்கொணாத வலி சுமந்த காலமாகும். ஆயுதப் போராட்ட மௌனிப்பின், பின்னர் தாயக மக்களின் துயர் தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில், அனைத்துலகிலும் தமிழ் மக்களுக்கான அமைப்புக்கள் பல தோன்றி தொடர்ச்சியான அரசியல் மற்றும் மனிதாபிமான உதவி முன்னெடுப்புக்களை செயறபடுத்தி வருகின்றன.
அரசியல் இராஜதந்திர பணிகளில் பல முனைகளிலும் இயங்கி வரும் அமைப்புகள், புலத்து வாழ் தமிழீழ மக்களின் மன வெளிப்பாடுகளை அந்தந்த நாட்டு அரசியலுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
தாம் வாழும் நாடுகளையும் ஏனைய முக்கிய நாடுகளையும் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வுக்காக குரல் கொடுக்குமாறு வலியுறுத்தியும் வருகின்றன.
அந்த அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை தென்னாபிரிக்க அரசுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு ஒடுக்கு முறைக்கெதிரான தமிழ் மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு வேண்டப்பட்டதுடன் இச் சந்திப்பிற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தது.
தென்னாபிரிக்கா வெளியுறவு அமைச்சுடன் ஏற்கனவே ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பினை லண்டனில் உள்ள தென்னாபிரிக்கத் தூதுவராலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.
தென்னாபிரிக்க பிரதி வெளியுறவு அமைச்சர் கௌரவ நோமைன்டியா ம்பெக்டோ, பிரித்தானியாவிற்கான தென்னாபிரிக்க தூதுவர், தென்னாபிரிக்கா துணை ஜனாதிபதியின் ஆலோசகர் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்ட இச் சந்திப்பில்,
புலம்பெயர் மக்களின் அமைப்புக்களான பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), 14 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை (ICET), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), அமெரிக்க தமிழர் அரசியற் செயலவை (USTPAC) பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளை முன் வைத்து உரையாடிய மேற்படி அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடந்த காலங்களைப் போல சிறிலங்கா அரசு இவற்றினைத் தீர்க்காது இழுத்தடிப்பு செய்ய விடலாகாது என வலியூறுத்தினார்கள்.
அத்தோடு வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு தீர்மானமும் தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளும் வகையில் அமைய வேண்டும் என தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஒன்றுபட்ட தமிழர் பிரதிநிதிகளின் வேண்டுகோள்களின் நியாயப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த தென்னாபிரிக்க தரப்பினர் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி தெரிவித்தனர்.
நிற வெறிக்கெதிராகப் போராடிய ஆபிரிக்காவின் மிக முக்கியமான சக்தியான தென்னபிரிக்காவிற்கு தமிழர் தரப்பின் நியாயங்களைப் புரிய வைத்து வென்றெடுப்பது முக்கியமானதாகும்.
தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோட்பாட்டில் உறுதியாகவுள்ள மேற்படி புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வெளிப்படைத் தன்மையுடன் ஒற்றுமையாக ஒரே அணியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது எம் உரிமைப் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
எதிர்வரும் காலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் பல ராஜ தந்திர நகர்வுகளை புலம் பெயர் அமைப்புகள் ஒற்றுமையாக மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையளிக்கும். லண்டன் ஒன்று கூடல் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாகும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இனப்பிரச்சினை தீர்வுக்காக ஹெல உறுமயவும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் பேச்சுநடத்த வேண்டும்: தென்னாபிரிக்கா
» புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum