Top posting users this month
No user |
Similar topics
தமிழகத்தில் அதிகரிக்கும் எகிப்திய முறையில் கட்டப்படும் பிரமிடு குடில்கள்
Page 1 of 1

தமிழகத்தில் தற்போது விவசாயத் தோட்டங்களில் சிமென்ட் பயன்படுத்தாமல் எகிப்திய கட்டிட முறையில் பிரமிடு குடில் வீடுகள் கட்டுவது அதிகரித்துள்ளது.
எகிப்தியர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிரமிடு வடிவம், பிரபஞ்ச சக்தியை திரட்டி சேமிக்கும் தன்மை உடையது என்ற உண்மையை அறிந்திருந்தனர்.
அந்த பிரமிடு வடிவ அறைக்குள் பழங்கள், பால் உள்ளிட்ட பொருட்களை வைத்தால் சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.
தமிழகத்தில் சமீபகாலமாக விவசாயிகள், பண்ணைத் தோட்டங்களில் மதிய உணவு இடைவேளை ஓய்வுக்காகவும், விவசாயக் கருவிகள், பழங்கள், காய்களை வைக்கவும், பிரமிடு வடிவத்தில் குடில் கட்டுவது அதிகரித்துள்ளது.
இந்த பிரமிடு குடில் வீட்டில் வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமான சீதோஷ்ண நிலையும் இருக்கிறது.
திண்டுக்கல் அருகே செட்டியப்பட்டியில் பிரமிட் வடிவ குடில் அமைத்துள்ள விவசாயி ஏ.ஜானகிராமன் கூறுகையில், சிமென்ட், கம்பி மட்டுமில்லாது ஒரு ஆணி கூட இந்த குடில் வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்தவில்லை.
இரும்பு ஆணி, கம்பிகளுக்கு பதிலாக செப்பு ஆணி, கம்பிகளை பயன்படுத்தினோம்.
இந்தக் குடில், முழுக்க முழுக்க ஓடை மண்ணில் கடுக்கா தூள், கருப்பட்டி பாகு, கலந்து பூசினோம்.
பூசி முடித்தபின், அதன் மேலே புற்று மண், கரையான் மண் பூசி அதன்மேலே சாணி போட்டு மெழுகினோம்.
வெளியில் குளிர் அடித்தால், குடிலின் உள்ளே வெப்பமாக இருக்கும். வெளியே வெப்பம் அடித்தால் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும்.
மேற்கூரையில் தென்னங்கீற்றுகளுக்கு மேல் காமாட்சி புல்லை பரப்பியுள்ளோம். இந்த புல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொண்டு, பிரமிடு அறைக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மேலும், கெட்டுப்போகக்கூடிய பழங்கள், காய்கறிகளை வைத்துக்கொள்ள குளிர்பதனக் கிடங்காகவும், இந்த குடில் வீடுகள் மூலம் இரட்டிப்பு பயன் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
» ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்
» அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் அறிகுறி!
» ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்
» அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் அறிகுறி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum