Top posting users this month
No user |
Similar topics
அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் அறிகுறி!
Page 1 of 1

வரவு செலவு திட்டத்தில் நெல் விலை கிலோ ஒன்றுக்கு 50ரூபாவாக அதிகரித்தமையால் அரிசி விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றபட்டுள்ளார்கள்.
எப்படியிருப்பினும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பினால் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
புதிய விலையின் கீழ் கடைகளில் நாட்டு அரிசி ஒரு கிலோ 85 ரூபாவாகவும், சம்பா அரிசி அதற்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது என பொலனறுவை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ரொஷான் டி சில்வா தெரிவித்தார்.
தேசிய அரிசி விலை அதிகரிக்கப்பட்டதனால் குறைந்த விலைக்கு வெளிநாட்டு அரிசி கடைகளில் கொள்வனவு செய்யப்படுகின்றது. எதிர்காலத்தில் இவ்வாறு வெளிநாட்டு அரிசி கடைகளுக்கு தொடர்ந்து கொண்டுவரப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட விலை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்ற நிவாரணம் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் கீழ் வெளிநாட்டு அரிசி வகைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கு மேலதிகமாக வரவு செலவு திட்டத்தில் உருளைக்கிழங்கு, தேயிலை, இறப்பர், மற்றும் பால் உள்ளிட்ட விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையினை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜே.வி.பிக்குள் மீண்டும் பிளவு ஏற்படும் அறிகுறி
» மைத்திரிக்கு ஆதரவு வழங்கியவர்கள் சுதந்திர கட்சியை விட்டு செல்லும் அறிகுறி?
» ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum