Top posting users this month
No user |
Similar topics
ரணிலுக்கு எதிரான பிரேரணையில் 60 எதிர்கட்சி உறுப்பினர்கள் கையொப்பம்
Page 1 of 1

எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை உறுப்பினர்களிடம் இன்று கையொப்பம் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் குறித்த பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் இன்றைய தினம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திசாநாயக்க சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடைபெறாவிட்டால் இவ்வாரத்திற்குள் அதை சமர்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் கையொப்பம் தேவைப்படாவிட்டாலும்,
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்காக இலகுவில் பெரும்பான்மையினரின் கையொப்பம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டதாக வீரக்குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 பேர் கையொப்பம்
» உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு: எதிர்கட்சி இல்லாத பிரதேச சபை
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum