Top posting users this month
No user |
Similar topics
மூங்கில் குருத்து வறுவல்
Page 1 of 1
மூங்கில் குருத்து வறுவல்
மூங்கில் குருத்து - 2
வெங்காயம் - 1/2 கப் (பொடியதாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5 இலை
உப்பு - தேவையான அளவு
முதலில் மூங்கில் குருத்தை நன்றாக கழுவி அதன் தோலை உரித்து கொள்ளவும். அடுத்து அதன் மேல்பகுதியையும், கீழ்பகுதி நுனியையும் வெட்டி விட்டு மற்றபகுதியை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
அடுப்பில் வாணலி வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின்னர் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மூங்கில் குருத்தையும் போட்டு வதக்கவும். 5 நிமிடம் மூடிப்போட்டு மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
அடுத்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் தூவி கிளறிவிடவும்.
தேவையான அளவு உப்பு போட்டு மறுபடியும் மூடி போட்டு மிதமான தீயிலேயே அடிக்கடி கிளறிவிட்டு வதக்கவும். 2 நிமிடம் கழித்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum