Top posting users this month
No user |
சுக்கினி வறுவல் & சுக்கினி முட்டை வறுவல்
Page 1 of 1

சுக்கினி - ஒன்று
மிளகுதூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பச்சரிசி மாவு - 4 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
மைதா (அ) கோதுமை மாவு - 4 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரித்தெடுக்க
சுக்கினியை கழுவி துடைத்து விட்டு வட்ட வடிவமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளின் இருபுறமும் மிளகுத்தூள் மற்றும் உப்பை கலந்து தூவி விடவும்.
மிளகு தூள் தூவிய துண்டுகளை எடுத்து அரிசி மாவில் போட்டு நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரிசி மாவில் பிரட்டிய சுக்கினியை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான சுக்கினி வறுவல் தயார். அதில் சிறிது வறுத்த வெள்ளை எள்ளை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வட்டமாக நறுக்கிய சுக்கினியை மைதா அல்லது கோதுமை மாவில் பிரட்டி எடுத்து அதை முட்டை கலவையில் தோய்த்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டை கலவையில் தோய்த்து எடுத்த சுக்கினியை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுக்கினி முட்டை வறுவல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum