Top posting users this month
No user |
Similar topics
சிறு கிழங்கு பொரியல்
Page 1 of 1
சிறு கிழங்கு பொரியல்
சிறுகிழங்கு - கால் கிலோ
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 1 பல்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்- 2
சீரகம் - அரை ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரைஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
சிறு கிழங்கைச்சுற்றி மண் அதிகம் இருக்கும். அதனை ஒரு பழைய துணிப்பையில் போட்டு உருட்டினால் தோலோடு சேர்ந்து வந்து விடும் அல்லது தண்ணீரில் போட்டு அலசி தோல் நீக்கவும். சிறியதாக கட் செய்து கொள்ளவும். தண்ணீரில் சிறுகிழங்கு, உப்பு போட்டு வேகவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
வெங்காயம் கட் செய்து கொள்ளவும். தேங்காய், பூண்டு, சீரகம், மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த சிறுகிழங்கை சேர்த்து பிரட்டவும்,தேங்காய் கலவை சேர்த்து கிளறி சிம்மில் சிறிது நேரம் வைத்து இறக்கவும்.
சுவையான சிறு கிழங்கு பொரியல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum