Top posting users this month
No user |
நீதிமன்றத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்: ஜெப்ரி அழகரட்னம்
Page 1 of 1

நீதிமன்றத்தை பிரதமர் மாத்திரமல்ல அனைவரும் விமர்சிக்கலாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்னம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் மாத்திரமல்லாது நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்தின் செயற்பாடுகள் சரியோ, பிழையோ விமர்சனம் செய்வதற்கான சட்டபூர்வ உரிமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கோத்தபாய ராஜபக்ஸ கைது நடவடிக்கையை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவு குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து நாட்டின் பிரதமர் விமர்சனம் செய்யக் கூடாது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
அண்மையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதி மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கபட்டிருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கத்திற்கு திருப்தி ஏற்படாதவிடத்து நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்துதல் சட்ட ரீதியான உரிமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கௌரவமான முறையில் விமர்சிக்கப்படும் விமர்சனங்கள் கருத்து சுதந்திரத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விமர்சனங்களையும் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் குற்றச்சாட்டுக்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக்கொள்ள கூடாது என ஜெப்ரி அழகரட்னம் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விமர்சனங்கள், நீதவான்கள் மீதான அவதூறுகள், அவமரியாதையான வார்த்தைப் பிரயோகங்கள், நன்மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விமர்சனங்களே நீதிமன்றத்தை அவமரியாதை செய்ததாக கருதப்படும்.
நீதிமன்ற விவகாரங்கள் குறித்த விமர்சனங்கள் சட்டத்தை மேலும் அபிவிருத்தி செய்ய வழிசமைக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum