Top posting users this month
No user |
Similar topics
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பொன்சேகாவின் மனு
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்குமாறு உத்தரவிடும்படி கோரி, முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பொன்சேகா தொடர்பான மனு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரியான முறையில் மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட சரத் பொன்சேகாவிற்கு, பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு அனுமதி வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேகச் செயலாளர் சேனக டி சில்வாவினால் கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி இம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டிருந்தமையினால், வெற்றிடமாக காணப்பட்ட அவரது இடத்திற்கு, ஜயந்த கெட்டகொடவை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய உத்தரவிடும்படி சேனக டி சில்வா தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்க, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, ஜயந்த கெட்டகொட உள்ளிட்ட எட்டு பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இராணுவ நீதிமன்றத்தினால் தான் குற்றவாளியாக்கப்பட்ட பின்னர் தனக்கு அமைச்சர் பதவி இழக்கப்பட்டுள்ளதாக அவரது மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த பக்கம் சாய்ந்த பொன்சேகாவின் உறுப்பினர்கள்
» சரத் பொன்சேகாவின் மருமகனும் தேர்தலில் போட்டி
» பொன்சேகாவின் "ஜம்பரை" மைத்திரிக்கு அணிவிப்பதாக சூளுரைத்த முஸ்லிம் தலைவர்கள்! இன்று அவரது காலில் விழ முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum