Top posting users this month
No user |
Similar topics
நாம் எமது உறவுகளை நினைவு கூருவோம்! எவராலும் தடுக்க முடியாது: பிரசன்னா இந்திரகுமார்
Page 1 of 1

எத்தனை தடைகள் வந்தாலும் அவை அனைத்தையும், உடைத்தெறிந்து நாம் எமது உறவுகளை நினைவு கூருவோம், இதனை எவராலும் தடுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு வவுணதீவு விளாவட்டுவான் மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கே.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்க தலைவர் கே.செல்வேந்திரன், செயலாளர் கதிர் பாரதிதாசன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,எங்களுடைய இன அழிப்பை நாம் மறந்து வாழ முடியாது. அது எப்போதும் எமது மரண வீட்டிற்கு ஒப்பானது. 2009ம் ஆண்டு எமது இனத்தை அழித்தமைக்காக இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை நாம் தூக்கி எறிந்தோம்.
ஆனால் எமது இனத்தை அழித்து ஒழித்த நாளை இன்றும் கூட யுத்த வெற்றி நாளாக அவர் நடத்துகின்றார். நாட்டில் உள்ள இன்னுமொரு இனத்தை அழித்து ஒழித்த நாளை கொண்டாடுபவர் எவ்வாறு ஒரு முழுமையான நாட்டிற்கு தலைவராக இருக்க முடியும். அவர் மீண்டும் அரசியல் பிரவேசிப்பதற்காக மேற்கொள்ளும் நாடகமே இந்த யுத்த வெற்றி நாள் ஆகும்.
ஆனால் இந்த நாட்டின் புதிய தலைமை இந்த நாளை இறந்தவர்களின் நாளாக அனுஷ்டிக்க தீர்மானித்திருக்கும் விடயமானது அனைத்து இனமக்களையும் அனுசரித்துச் செல்ல இந்த அரசு எடுத்திருக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு நாடு ஒரு நல்ல நிலைக்கு சென்று கொண்டிருக்கும் போது முன்னைய ஆட்சியாளர்களின் விதண்டாவாத தன்மை நாட்டை மீண்டும் ஒரு பாரிய சிக்கலுக்குள் கொண்டு செல்லவே எத்தணிக்கின்றது. தற்போதைய சூழலில்,வடக்கு கிழக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகள் குறைந்துள்ளதாக தெரியவில்லை.
ஏனெனில் இந்த நினைவஞ்சலி தினத்தையும் நாம் புலனாய்வாளர்களின் கெடுபிடிக்குள் இருந்து தான் நடைமுறைப்படுத்த வேண்டி இருக்கின்றது. அதிலும் மட்டக்களப்பில் கெடுபிடிகள் அதிகளவிலேயே இருக்கின்றது.
எமது மக்களின் அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் இவ்வாறான இராணுவ ஆட்சிமுறைகளை தடுக்க வேண்டும். நாம் ஒருபோதும் எமது மக்களின் தியாகங்களை மறந்துவிடப் போவதில்லை. அவர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது தடுப்பது ஜனநாயகம் அல்ல.
இதனை ஏன் செய்கின்றீர்கள் எமது நிகழ்வுகளுக்கு வரும் மக்களை வீடு வீடாகச் சென்று தடுப்பதற்கும், அச்சுறுத்துவதற்கும் உரிய காரணம் என்ன. உங்களிடம் வினயமாகக் கேட்கின்றேன். உங்கள் சமூகத்தில் உங்கள் உறவுகள் இறந்தால் நீங்கள் நினைவஞ்சலி செலுத்துவதில்லையா ஏன் தமிழர்கள் எனும் போது மாத்திரம் இவ்வாறான பிரிவினை காட்டுகின்றீர்கள்.
இந்த நிலையை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் நாடு மீண்டும் ஒரு பாரிய கோரத்திற்குள் சிக்கலாம்.எனவே எமது தமிழ் உறவுகளின் நினைவு நாளில் அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டியும் அவர்கள் என்ன காரணத்திற்காக உயிர் நீத்தார்களோ அந்த எண்ணங்கள் எம் அனைவர் மூலமும் நிறைவேற்றப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் அயராது உழைப்போம்.
அத்துடன் இந்த நினைவஞ்சலி வருடாவருடம் தவறாது நடக்கும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன் என்று தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளராக இந்திரகுமார் பிரசன்னா நியமனம்
» பிரபாகரனின் இறப்பு பற்றி எவராலும் கூற முடியாது: கே.பி
» எமது சந்ததிக்கான ஒரு இராச்சியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்: வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum