Top posting users this month
No user |
Similar topics
தமிழர்கள் எழுவரினதும் விடுதலையை உறுதி செய்யவும்: ராமதாஸ் வலியுறுத்து
Page 1 of 1

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய 7 தமிழர்களும் விடுவிக்கப்படுவதை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பாட்டாலி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டு கடந்த 24 வருடங்களாக சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலைக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 15ம் திகதி வரை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கு அப்படியே வீசப்பட்டு விடுமோ எனும் கவலையை உச்ச நீதிமன்றம் தற்போது போக்கியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து இவர்களையும் ஏற்கனவே ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சிந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோலையும் விடுதலை செய்யபோவதாக தமிழக அரசாங்கம் அறிவித்தது.
தமிழக அரசின் இவ்வுத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசினால் தொடரப்பட்ட வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் ராஜேந்திர மல் லோதா தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு முதற்கட்ட விசாரணைகளுக்கு பின் கடந்தாண்டு ஜுலை மாதம் 22ம் திகதி இறுதிகட்ட வாதத்தை ஆரம்பிக்கலாம் என அறிவித்தது.
இதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் குறித்த 7 தமிழர்களும் விடுதலையாகுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது.
எனினும் துரதிஷ்டவசமாக குறித்த திகதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படாததுடன், அமர்வுக்கு தலைமையேற்றிருந்த முன்னாள் நீதிபதி லோதா செப்டெம்பர் மாதம் 27ம் திகதி ஓய்வு பெற்றமையினால் விசாரணை அமர்வு செயலிழந்து விட்டது.
இதனால் அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு புதிய தலமை நீதிபதியை அமர்த்தி இவ்வழக்கு விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து தீர்ப்பளிக்க வேண்டும் என பாட்டாலி மக்கள் கட்சியின் நறுவனர் வலியுறுத்தி வந்தார்.
எனினும் செயற்படாத தமிழக அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
இதனால் குறித்த 7 தமிழர்களின் விடுதலை எட்டாக்கனியாகி விடுமோ என அஞ்சி வந்த நிலையில், உச்ச நீதிமன்றமே இவ்வழக்கை எதிர்வரும் ஜுலை மாதம் 15ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
சில ஆரம்ப கட்ட நடைமுறைகளுக்கு பின்பு ஜூலை மாதத்திலேயே இறுதி வாதம் நிறைவடையக்கூடும்.
இதை உணர்ந்து இவ்வழக்கை வெற்றிகரமாக நடத்த தமிழக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்புகள் தொடர்பில் 7 வினாக்களை எழுப்பியுள்ளது.
இக்கேள்விகளுக்கு தெளிவான பதில்களை முன்வைத்தாலே தமிழர்களின் விடுதலை உறுதியாகிவிடும்.
அதுமாத்திரமல்லாது குறித்த வழக்கு அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏனும் காரணத்தினால் இதை கௌரவ பிரச்சினையாக எடுத்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய 7 தமிழர்களில் அறுவர் சிறை விடுப்புக் கூட வழங்கப்படாமல் கடந்த 24 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருப்பது, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் திரித்துப் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது,
சிறைகளில் அவர்கள் அப்பழுக்கற்ற நன்னடத்தையை கடைபிடித்து வருவது ஆகியவற்றை நீதிபதிகளுக்கு உணர்த்தினாலே இவர்களுக்கு நீதி கிடைத்துவிடும்.
இந்த வழக்கில் தமிழக அரசு கடைபிடித்த அலட்சியம் காரணமாக ஏற்கனவே ஓராண்டு தாமதமாகி விட்டது.
எனவே, இனியும் அலட்சியமாக செயற்படாமல் அரசியல் சட்ட விஷயங்களிலும், குற்றவியல் வழக்குகளை நடத்துவதிலும் வல்லமை பெற்ற சட்ட வல்லுனர்களை கண்டறிந்து, அவர்களை தமிழக அரசின் வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் கோரியுள்ளார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு 7 தமிழர்களின் விடுதலையை மாத்திரமல்லாது, இந்தியா முழுவதும் மத்தியப் புலனாய்வு பிரிவு விசாரிக்கும் வழக்குகளில் தொடர்புபட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு என்பதையும் தீர்மானிக்கும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் இந்த வழக்கில் ஆஜராவதற்கான மூத்த வழக்கறிஞர்களை இனங்கண்டு தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
இந்நடவடிக்கையினால் இவ்வழக்கில் அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாட்டாலி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இனப்படுகொலை செய்த ராஜபக்ஸவை ஈழத் தமிழர்கள் வீழ்த்த வேண்டும்: ராமதாஸ்
» மோடியின் இலங்கை விஜயத்தை இரத்து செய்யவும்: வீ.நாராயணசுவாமி வேண்டுகோள்
» விருப்புவாக்கு அடிப்படையில் அடுத்துள்ளோரை தெரிவு செய்யவும்: கபே அமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum