Top posting users this month
No user |
Similar topics
சமூக நீதியை நிலைநாட்ட அனைவரும் குரல் கொடுங்கள்!
Page 1 of 1

யுத்தத்திற்குப் பின்பான தமிழர்களின் வாழ்வியல் எப்படியாக உள்ளது என்று ஆராயும்போது பிரச்சினைகள் இடம் நகர்ந்துள்ளனவே தவிர பிரச்சினைகள் தீரவில்லை என்ற உண்மை உணரப்படும்.
யுத்தத்தால் அவலப்பட்ட மக்கள் இப்போது வேறு வகையான அவலங்களை சந்தித்துள்ளனர். யுத்த காலத்திலும் அதனை அடுத்த காலப்பகுதியிலும் யுத்த அனர்த்தத்தின் தாக்கங்கள் இருந்து வந்துள்ளன.
எனினும் இப்போது எங்கள் இளைஞர்களின் நடத்தை சார் விடயங்கள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பொதுவில் யுத்தம் நடந்த பூமியில் சந்தர்ப்ப சூழல்களாலும் திட்டமிடப்பட்ட ரீதியிலும் சமூகப் பிறழ்வுசார் பிரச்சினைகள் எழுகை பெறுவது வழமை.
இது யுத்தம் நடந்து முடிந்த நாடுகளில் உணரப்பட்ட அனுபவம். இந்த அனுபவத்தை எங்கள் மண்ணும் வழங்கத் தவறவில்லை.
இளைஞர்களிடையே சர்வசாதாரணமாகிப் போன மதுப்பாவனை, புகைத்தல் என்பன குடும்ப கட்டுமானங்களை உடைத்து எறியக்கூடியவை.
இத்தகையதொரு சூழமைவில் போதைப் பாவனை நம் மண்ணில் மலிவுறத் தொடங்கிற்று. இதன் காரணமாக சமூக அனர்த்தங்கள் மலிந்து போயிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பொதுவில் பெண்களுக்கான அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதைக் காணமுடிகிறது.
பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுகின்ற பெண்பிள்ளைகளை பின் தொடர்கின்ற இளைஞர்களின் தொல்லையால் படிப்பு வேண்டாம் வீட்டில் இருந்தால் போதும் என்ற பழைய நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் பெற்றோர்கள் உள்ளனர்.
இதுதவிர இரவு எட்டு மணி வரை இயங்குகின்ற தனியார் கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பற்ற செயல்களால் பெற்றோர்கள் ஏங்கி இடிவிழுந்து போயுள்ளனர்.
இரவு வேளையில் கற்பிக்கப்படுகின்ற தனியார் கல்வி முறைக் கலாசாரத்தால் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இரவு நேரத் தனியார் கல்வி நிறுவன கற்பித்தல் முடிந்த பின் துவிச்சக்கரவண்டியில் அல்லது மோட்டார் சைக்கிளில் தனது பெண் பிள்ளையைக் கூட்டிச் செல்லும் ஒரு தந்தையின் மனநிலையை உணர்வது யார்?
கூட்டாக மதுபோதையில் வருகின்ற இளைஞர் குழுமத்தின் சேட்டைத் தொந்தரவில் இருந்து தனது பிள்ளைக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் அந்த அப்பாவித் தந்தை அடையும் ஏக்கம் சாதாரணமானதன்று.
என்ன செய்வது? பணம் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்ட சமூக உருவாக்கத்தின் பொறுப்பற்ற செயல்களால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது.
எதுவாயினும் ஒரு காலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை சமூகமே பொறுப்பு எடுத்திருந்தது. ஒரு பெண் பிள்ளை மீது இளைஞன் ஒருவன் சேட்டை செய்வானாயின் அங்கே கூடியிருப்பவர்கள் திரண்டு அவனைத் தண்டிப்பர்.
இந்தச் சமூகப் பொறுப்பு பெண்பிள்ளைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதோடு குறித்த இளைஞர்களை வழிப்படுத்துவதாகவும் இருந்தது.
ஆனால் இன்று எது நடந்தாலும் நமக்கு என்ன? என்ற சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை எல்லோரையும் பாதிப்பதால் சமூக நீதியை, சமூகப் பொறுப்பை நிலைநாட்ட நாம் அனைவரும் குரல் கொடுப்பது கட்டாயமானதாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து அம்பாறையில் நீதியை நோக்கிய பயணம்
» லஞ்சம் வாங்காதீர்கள் கொடுங்கள்
» எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள்: யாழில் ஜனாதிபதியிடம் கண்ணீர்மல்கிய உறவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum