Top posting users this month
No user |
எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள்: யாழில் ஜனாதிபதியிடம் கண்ணீர்மல்கிய உறவுகள்
Page 1 of 1

எங்கள் பிள்ளைகளை படையினரும், ஆயுதம் தாங்கியவர்களும் கொண்டு சென்றார்கள். அதற்குப் பின்னர் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை. எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்திற்கு நேற்றைய வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
வடகிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் அங்கஜன் இராமதன் வீட்டில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேற்கண்டவாறு கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,
நாட்டில் பல இடங்களில் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் நாங்கள் அறிகிறோம்.
அவற்றை கேட்கும்போதெல்லாம் எங்கள் பிள்ளைகளுடையதாக இருக்குமோ? எங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளார்களா? உயிருடன் இருக்கிறார்களா? என நாங்கள் தினசரி செத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்களுடைய பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள். எங்கள் பிள்ளைகளை காணாமல்போக செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என நாங்கள் கேட்கமாட்டோம்.
மேலும் நாங்கள் 8 மாவட்டங்களிலிருந்து வந்திருக்கிறோம். எங்களுடைய பிள்ளைகளை சுற்றிவளைப்பிலும், சந்திகளிலும் சோதனை நடவடிக்கைகளிலும் நின்றிருந்த படையினரும், கடற்படையினரும், பொலிஸாரும் விசாரணைக்கென கூறியே அழைத்துச் சென்றார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum