Top posting users this month
No user |
Similar topics
மிளகு அடை - 2
Page 1 of 1
மிளகு அடை - 2
புழுங்கல் அரிசி - அரை கிலோ
கடலைப்பருப்பு - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 25
தேங்காய் - ஒன்று
பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு
கல் உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்+2 மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
தேங்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் இஞ்சி ஆகியவற்றை போட்டு கொரக்கொரப்பாக அரைக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும். பெருங்காயத் துண்டையை மாவில் போட்டு அரைத்துவிடவும்.
அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பெருங்காயத் தூளாக இருந்தால் தாளிக்கும் போது போட்டு தாளிக்கவும்.
தாளித்ததும் மிளகு, சீரகம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும்.
அனைத்தும் பொரிந்ததும் தாளித்தவற்றை அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்திருக்கும் மாவை 2 குழிக்கரண்டி அளவு ஊற்றி, நடுவில் கரண்டியை வைத்து அழுத்திவிடவும்.
அடை மொத்தமாக இருப்பதால் அடிபிடித்து விடாமல் இருக்க தீயை குறைத்து வைத்து மூடிபோட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்.
3 நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும். திருப்பி போட்ட பின் மூடவேண்டாம். மேலும் 3 நிமிடங்கள் கழித்து வாணலியில் இருந்து எடுத்துவிடவும்.
சுவையான மிளகு அடை தயார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum