Top posting users this month
No user |
Similar topics
கொத்தமல்லி துவையல்
Page 1 of 1
கொத்தமல்லி துவையல்
கொத்தமல்லி - ஒரு கட்டு
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2 (காரத்திற்கு தகுந்தமாதிரி எண்ணிக்கை)
புளி - சிறிய நெல்லி அளவு
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
கொத்தமல்லியை அலசி சுத்தம் செய்துவிட்டு, இலைகளை மட்டும் தனியாக கிள்ளி வைக்கவும்.
பின் தண்டுகளை மிக சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன், வரமிளகாய், உளுத்தம் பருப்பு இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும்.
பின் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய தண்டு மற்றும் ஆய்ந்து வைத்துள்ள இலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக 2 நிமிடம் வதக்கி, தனித்தனியாக வைக்கவும்.
மிக்ஸியில் வரமிளகாய், உளுத்தம்பருப்பு இவைகளை முதலில் அரைத்துவிட்டு, பின் தண்டை சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். பின் இலைகளையும் புளியையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
விருப்பப்பட்டால் கடுகு தாளித்து கொட்டவும்.
சுவையான துவையல் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum