Top posting users this month
No user |
Similar topics
நாடு திரும்புகிறவர்கள் விசாரணைகளுக்கு அஞ்சுகின்றார்கள்: டி.எம்.சுவாமிநாதன்
Page 1 of 1

தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் விசாரணைகளுக்கு அஞ்சுகின்றார்கள் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் வாழ்ந்து வந்தவர்களுள் 35 வீதமானோரே நாடு திரும்பியுள்ளனர்.
ஒரு இலட்சம் இலங்கையர்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள், அவர்களில் பலர் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.
மேலும் பலருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலங்கை திரும்பவில்லை. அனைவரும் நாடு திரும்பிவிட்டதாக கூறுவது மிகப்பெரிய பொய். கடந்த புதன்கிழமை கொழும்பு, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அகதிகளிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்கள் விசாரணைகளுக்கு அஞ்சுகின்றார்கள், நாடு திரும்பியவர்களுக்கு இது ஒரு அடிப்படை பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இதனால், நாங்கள் விசாரணை காலத்தை குறைத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். தமிழகத்தில் உள்ள அகதிகள் மூன்று முகவர் அமைப்புகள் ஊடாக தொடர்ந்து நாடு திரும்பி வருகின்றனர்.
இந்த விடயம் சம்பந்தமாக தமது அமைச்சு,இராணுவம், குடிவரவு திணைக்களம் மற்றும் காவல்துறையினருடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பும் அனைத்து அகதிகளையும் வரவேற்க அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளது. வியாழக்கிழமை நாடு திரும்பியவர்கள் இந்திய கடவுச்சீட்டுகளை கொண்டிருந்தனர். இரட்டை குடியுரிமை முறையில் அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர், அத்துடன் இவர்கள் அனைவரும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள்.
எதிர்வரும் நாட்களில் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளவர்கள் அதனை முன்கூட்டியே அறிவிக்குமாறும், அப்போது அவர்கள் நாடு திரும்புவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய அகதிகளுக்கு இலங்கையில் சொந்தமான காணிகள் இருப்பின் நேரடியாக அவர்களினால் அக்காணிகளுக்கு செல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோழமையான வரவு செலவுத் திட்டம்: சுவாமிநாதன்
» விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்!– பசில்
» லியனகேவை விசாரணைகளுக்கு அழைக்கவில்லை: குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum