Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் கல்யாண கறி
Page 1 of 1
வாழைக்காய் கல்யாண கறி
நன்கு முற்றிய வாழைக்காய் ஒன்று
தேங்காய் துருவல் 4 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி கால் டீ ஸ்பூன்
தாளிக்க
2 டீ ஸ்பூன் எண்ணெய்
கடுகு கால் டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு கால் டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
வறுத்து அரைக்க:
2 ஸ்பூன் தனியா
ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
அரை ஸ்பூன் சீரகம்
ஒரு காய்ந்த மிளகாய்
வாழைக்காயை தோல் சீவி சிறிது சிறிதாக (பொடிப் பொடியாக அல்ல) நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஒரு விசில் வரும் வரை குக்கரில் போடவும்.
பிறகு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள வற்றை வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். (கடலை பருப்பு பொன்னிறமாக வேண்டும்.) பிறகு வறுத்த சாமான்களை ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து அதில், வேக வைத்த வாழைக் காயை வடித்து அதில் போட்டு கங்கு பிரட்டவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு வறுத்து வைத்துள்ள பொடியை வாழைக்காயில் தூவி நன்கு கலந்துவிடவும். கடைசியாக தேங்காய் துருவலையும் அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இப்போது சூப்பர் கல்யாண கறி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum