Top posting users this month
No user |
Similar topics
கீமா பிரெட் ரோல்
Page 1 of 1
கீமா பிரெட் ரோல்
கீமா - அரை கோப்பை
முட்டை கோஸ் - அரை கோப்பை
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்புத்தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சான்ட்விச் பிரெட் துண்டுகள் - 10
மைதா மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணை - பொரித்தெடுக்க
முட்டை கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மைதாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பசை போல் கலந்துக் கொள்ளவும்.
பானில் கொஞ்சம் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சைமிளகாய் சேர்க்கவும்.
நன்கு வதங்கியவுடன் கீமாவை போட்டு கிளறவும்.
கீமா அரை வேக்காட்டில் இருக்கும் போது, முட்டை கோஸ், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.
எல்லாம் கலவையாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும். பிரெட் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.
ஒரு துண்டு எடுத்து, அதன்மீது கொஞ்சம் நீர் தெளிக்கவும். பூரி உருட்டும் கட்டைக் கொண்டு பிரெட்டை சமப்படுத்தவும்.
இதனுள் தயார் செய்த கலவையை கொஞ்சம் வைத்து ரோல் செய்யவும். ஓரங்களை மைதா பசையை கொண்டு ஒட்டவும்.
தயாரித்த ரோல்களை எண்ணையில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum