Top posting users this month
No user |
Similar topics
கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ்
Page 1 of 1
கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ்
இட்லி - 10
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி
கல் உப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு குண்டு மணி அளவு
இட்லியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் மிளகாய் வற்றலை போட்டு கருகவிடாமல் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதிலேயே சீரகத்தை போட்டு ஒரு நிமிடம் வறுத்து, சீரகம் வெடித்ததும் எடுத்து விடவும். பின்னர் வறுத்தவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
ஆறியதும் எடுத்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து, அதில் நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளைப் போட்டு ஒரு முறை பிரட்டி விடவும்.
பிறகு பொடித்த கறிவேப்பிலை பொடியை போட்டு பொடி இட்லியில் நன்கு சேரும் படி ஒன்றாக கிளறி விடவும். மேலே 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மேலும் 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான, ஆரோக்கியமான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum