Top posting users this month
No user |
Similar topics
கோதுமை ரவை தோசை
Page 1 of 1
கோதுமை ரவை தோசை
உடைத்த கோதுமை ரவை - ஒரு டம்ளர்
உளுந்து - அரை கப்
பச்சைமிளகாய் - இரண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
என்ணெய் - சுடுவதற்கு
உளுந்தையும், உடைத்த கோதுமை ரவையையும் தனித்தனியே ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
நன்கு ஒரு மணி நேரம் ஊறிய பின் மிக்ஸியில் முதலில் உளுந்தை கழுவி விட்டு போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அதன் பின் அரைப்பட்ட உளுந்துடன் கோதுமையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு எண்ணெயை தவிர இதர பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து தோசை மாவு பதத்திற்கு உள்ள மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.
அரைத்த மாவை குறைந்தது மூன்று மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடவும்.
அதன் பின் சூடான தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி மெல்லியதாக வார்த்து அரை தேக்கரண்டி எண்ணெயை எல்லா இடங்களிலும் படும் படி ஊற்றவும்.
அடி பாகம் சிவந்ததும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.
சத்தான, நல்ல மணமுடன் சுவையான தோசை தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum