Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கைகொடுத்த அஷ்டமி: அதிமுகவினரின் வேண்டுதல் வீண்போகவில்லை

Go down

கைகொடுத்த அஷ்டமி: அதிமுகவினரின் வேண்டுதல் வீண்போகவில்லை Empty கைகொடுத்த அஷ்டமி: அதிமுகவினரின் வேண்டுதல் வீண்போகவில்லை

Post by oviya Mon May 11, 2015 1:09 pm

ஜெயலலிதாவுக்கு இன்று சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் எமகண்ட நேரத்தில் தீர்ப்பு கூறப்பட்டாலும், அதிமுகவினரின் சிறப்பு பூஜைகள் அவருக்கு கை கொடுத்துள்ளது.
இரண்டாம் இணைப்பு:

கை கொடுத்த அஷ்டமி

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாகும் நாள் மே 11ம் திகதி அவிட்டம் நட்சத்திரம், அஷ்டமி திதியாக உள்ளது. எமகண்ட வேளையான 11 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டதால் அதிமுகவினர் கலக்கத்தில் இருந்தனர்.

இது எதுவும் ஜெயலலிதாவின் தீர்ப்பை பாதித்து விடக் கூடாதே என்பதற்காக அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.

மேலும், கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையையும், அபராதத்தையும் ரத்து செய்து குமாரசாமி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

இது எதுவும் ஜெயலலிதாவின் தீர்ப்பை பாதித்து விடக் கூடாதே என்பதற்காக அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்தனர்.

அதிமுகவினரின் பூஜையும், வேண்டுதலும் வீண் போகவில்லை. ஜெயலலிதாவுக்கு அஷ்டமி திதி கைகொடுத்துள்ளது.

முதலாம் இணைப்பு:

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளான இன்று மே 11ம் திகதி, எமகண்ட வேளையில் தீர்ப்பு வெளியாவதால் அதிமுகவினர் சிறப்பு பூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

மே 11ம் திகதியான இன்று அவிட்டம் நட்சத்திரம், அஷ்டமி திதியாக உள்ளது.

இந்நிலையில், 11 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுவதால் அது சரியான எமகண்ட வேளையாகும்.

இதையடுத்து இது எதுவும் ஜெயலலிதாவை பாதித்து விடக்கூடாதே என்று அதிமுகவினர் சிறப்பு பூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

மே 11ம் திகதி, ஜெயலலிதா ஜாதகப்படி சுக்கிரன் விரயத்தில் இருக்கிறாராம். ஒருவேளை சொத்துக்கள் பறிமுதலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2ல் ராகு 8ல் கேது இருப்பதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதாம்.

குருவும், சனியும் சாதகமற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் செவ்வாய் சரியான இடத்தில் பிரகாசமாக இருக்கிறாராம். செவ்வாய் காரகன் பெயராக நீதிபதி குமாரசாமி இருக்கிறார்.

இதனால் ஜெயலலிதாவிற்கு நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum