Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார்! அடுத்த சில நாட்களில் பதவியேற்க முடிவு!
Page 1 of 1

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உட்பட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக இருக்கிறார். வரும் 17ம் தேதி அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், கர்நாடக ஹைகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் ஆகும் முன் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்று விடுவார் எனக் கூறப்படுகிறது.
எம்எல்ஏக்கள் கூடி அவரை முதல்வராக தேர்வு செய்வர். அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதத்தில் அவர் தேர்தலை எதிர்கொண்டு எம்எல்ஏவாக அவகாசம் உள்ளது.
ஆனால், தான் மட்டும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆவதற்கு பதிலாக, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ள அரசியல் லாபத்தை வைத்து சட்டமன்றத் தேர்தலையே முன் கூட்டி நடத்தி விடுவார் ஜெயலலிதா என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர்.
கர்நாடக ஹைகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட அறைக்குள் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததால், நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ப்பு விபரம் ஊடகங்களில் வெளியானது.
எனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் தான் விடுதலை செய்யப்பட்ட விவரத்தை, ஜெயலலிதாவும் தொலைக்காட்சி செய்திகள் வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டதாக போயஸ் கார்டன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதல்வராக பதவியேற்க தயங்கும் ஜெயலலிதா?
» மீண்டும் டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்!
» ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum