Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா நேரில் ஆஜராக தேவையில்லை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு
Page 1 of 1

பெங்களூருவில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதால் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா, ‘மேல்முறையீட்டு வழக்கில் மே 11-ம் திகதி காலை 11 மணிக்கு நீதிமன்ற ஹால் எண் 14-ல் தீர்ப்பு வெளியிடப்படும்' என நேற்று முன்தினம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், காவல்துறை டி.ஜி.பி. ஓம் பிரகாஸ், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பின்னர் பெங்களூரு மாநகர இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியாவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி 1 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் 5 நுழை வாயில்களிலும் சோதனைக்குப் பிறகே வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த முறை ஜெயலலிதா உட்பட 4 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்ற போதும், ஆயிரக்கணக்கான அதிமுக வழக்கறிஞர்களும் தொண்டர்களும் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
எனவே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் வடிவேலு நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
» பத்திரிகையாளர் சோ-வை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஜெயலலிதா
» தமிழகத்தில் கனமழை நிவாரணப் பணிகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum