Top posting users this month
No user |
Similar topics
மைதானம் மூடப்பட்டுள்ளதால் வீதியில் விளையாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
Page 1 of 1

டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் உடனடியாக திறக்குமாறு கோரி ஹற்றன் விளையாட்டுத்துறை பயிற்சியார்கள் உட்பட நகரவாசிகள், விளையாட்டு இளைஞர்கள் ஆகியோர் இன்று காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் விளையாட்டு மைதானத்தின் நிலைமையை சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கொண்டுவரும் வகையில் மைதானம் மூடப்பட்டுள்ளதன் காரணத்தினால் ஹற்றன் நகர மணிகூட்டு கோபுரத்திற்கு முன்னால் பிரதான வீதியில் ஆர்ப்பபாட்டத்தில் ஈடுப்பட்டவாறே விளையாட்டுதுறையாளர்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
அத்தோடு, மைதானத்தை வியாபாரமாக்காதீர், ரூபா 5500 அதிகமில்லையா?, அரசியலுக்கு பொதுமைதானத்தை அடகு வைக்காதே, நகர பிதாவுக்கு மட்டுமா மைதானம், பொது மைதானம் பொது மக்களுக்கு இல்லையா? என பாதாதைகளை ஏந்தியாவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
01.05.2015 அன்று முதல் 01.08.2015 அன்று வரை மைதானம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்தல் பலகை மைதானத்தின் நுழைவாயில் போடப்பட்டுள்ளது.
இதனால் எங்களது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல், வேறு பல தூரங்களில் உள்ள வசதிவாய்ப்பு இல்லாத மைதானங்களுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றோம்.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக பல கோடி ரூபா செலவழித்து இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்து கொடுத்தார்.
அபிவிருத்தி செய்து கொடுத்து 5 வருடங்கள் ஆகின்றன. 5 வருடங்களில் ஹற்றன், டிக்கோயா நகர சபை தலைவரால் திடீர் திடீரென மைதானம் மூடப்படுகின்றது. முன்னர் 24 மணித்தியாலயமும் திறந்து காணப்படும் தற்போது மூடப்பட்டே காணப்படுகின்றது.
அத்தோடு ஹற்றன், டிக்கோயா நகர சபை தலைவரும் அவருடைய நண்பர்கள் மட்டும் பயிற்சிகளில் ஈடுப்பட்டு செல்கின்றார்கள். இது ஒரு நியாயமற்ற செயலாகும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்மந்தமாக ஹற்றன் டிக்கோயா நகரசபை தலைவர் அழகமுத்து நந்தகுமார்விடம் தொடர்பு கொண்டு வினாவியபோது,
மைதானத்தில் அத்தியவசிய புனர்நிர்மாண நடவடிக்கைகள் காரணமாகவே மூடப்பட்டுள்ளது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் அனுமதியை பெற்றுத்தான் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. எனினும் மூன்று மாதத்திற்கு மைதானம் மூடப்படவிருந்தாலும் ஒரு மாதத்திற்குள் பணிகளை முடிவடைத்து திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பூனையிடம் விளையாடிய விநாயகர்
» பன்முகப்படுத்தப்பட்ட 10 இலட்ச ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட மைதானம் திறந்து வைப்பு
» ஆஸ்திரியாவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த லொறியில் 70 சடலங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum