Top posting users this month
No user |
Similar topics
இரகசிய முகாம்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு மங்கள கோரிக்கை
Page 1 of 1

இலங்கையில் இருப்பதாக கூறப்படும் இரகசிய முகாம்கள் குறித்து சரியான தகவல்களை வழங்கினால் அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது.
இறுதிக் கட்டப் போரின் போது, காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது,
எனவே இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் உண்டு என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் இரகசிய முகாம்கள் இருப்பதாகவும், அந்த முகாம்களில் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை வடக்கு,கிழக்கில் அவ்வாறான எந்த இரகசிய முகாம்களும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அக்குற்றச்சாட்டை மறுத்திருந்தார்,இந்த நிலையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இக்கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரகசிய முகாம்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு மங்கள கோரிக்கை
» யாழில் ரணில்: விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடம்- இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை!
» இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் இல்லை: இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum