Top posting users this month
No user |
Similar topics
சந்திரிக்கா தலைமையிலான மீள்குடியேற்ற குழுவுடன் பேசத் தயார்: மாவை
Page 1 of 1

யாழ்.வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களாக கையகப்படுத்தப்பட்டு அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 1013 ஏக்கர் நிலப்பகுதியில் 993 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் மேற்படி மீள்குடியேறவுள்ள மக்களுக்கான உதவித் திட்டங்களை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தின் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளிட்டவர்களுடன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், பிரதேச செயலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் சுமார் 1013 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
இதில் மீள்குடியேறுவதற்கு இதுவரையில் 993 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான குடிநீர் விநியோகம், மலசலகூட வசதிகள்,
மற்றும் தற்காலிக வீட்டுவசதி ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே அவை தொடர்பில் நாங்கள் சில தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். மேலதிகமாக புதிய மீள்குடியேற்றங்கள் தொடர்பாக எதுவும் பேசியிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
நாங்கள் இன்றைய தினம் வலி,வடக்கில் விடுவிக்கப்படாமலிருக்கும் பகதிகுள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்.
மேலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் படையினர், தமது படைமுகாம்களை அமைத்துக் கொண்டு தங்கியிருப்பது தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
இதனடிப்படையில் தாம் அந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள். மேலும் இவ்வாறான விடயங்களில் தடைகள் இருந்தால் அது தொடர்பாக நாங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் உள்ள மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவுடன் பேசுவதற்கும் தயார் என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
மேலும் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், காணிகளை துப்புரவு செய்வதற்கும், கிணறுகளை துப்புரவு செய்வதற்கும் கூட நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனித உரிமைகள் குழுவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அரசாங்கம் ஆயத்தம்
» ரணில் தலைமையிலான அமைச்சரவையை எதிர்பார்க்கும் மைத்திரி
» வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum