Top posting users this month
No user |
Similar topics
வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்!
Page 1 of 1

யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மற்றும் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில், ஆகியவற்றுக்கும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் மேற்படி ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், சந்தை சந்தி, ஒட்டகப்புலம் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
எதிர்க்கட்சி தலைவரிடம் ஒட்டகப்புலம் மக்கள் கோரிக்கை
எங்களுடைய சொந்த நிலங்களை விட்டு உறவினர், நண்பர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த பங்குனி மாதம் 100 ஏக்கர் நிலம் ஒட்டகப்புலம் பகுதியில் விடுவிக்கப்படும் என வெளியான செய்தி அறிந்து சொந்த மண்ணுக்குச் செல்லும் ஆவலுடன் வந்த எமக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்தது என ஒட்டகப்புலம் மக்கள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவருடன் மக்கள் கலந்து பேசுகையிலேயே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்கள்.
குறித்த விடயம் தொடர்பாக மக்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு மேலும் குறிப்பிடுகையில் இந்தப் பகுதியில் 160ற்கும் மேற்பட்ட வீடுகளில் படையினர் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றார்கள். மீள்குடியேற்றம் என்றதும் ஆவலுடன் வந்த எமக்கு எங்களுடைய வீடுகள் மட்டும், இலக்குவைத்து கபளீகரம் செய்யப்பட்டுள்ளதுடன், வேலிகளை அமைத்துக் கொண்டு படையினர் தங்கியிருக்கின்றமையானது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
எங்கள் பகுதியில் மக்கள் குடியிருப்பதாற்கான வீடுகள் எதனையும் விடுவிக்காமல் அவற்றை தாங்களே வைத்துக் கொண்டு தேவாலயத்தை மட்டுமே விடுவித்திருக்கின்றார்கள். என சுட்டிக்காட்டியிருந்ததுடன், இந்த விடயங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவரிடம், மகஜர் ஒன்றிணையும் மக்கள் கையளித்திருந்தனர். இதேவேளை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வீமன்காமம் பகுதியிலுள்ள மக்கள் குறிப்பிடுகையில் தமது இருப்பிடங்கள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான விவசாயத்தை செய்யும் நிலங்கள் எவையுமே விடு விக்கப்படவில்லை. என சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இதன்போது இந்த விடயங்கள் தொடர்பாக, விரைவில் ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மக்களுக்கு கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முறைப்படி அறிவிப்பு வந்தால் எமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி என்கிறார் சம்பந்தன்!
» 'சம்பந்தன்' என்ற பெயர் 'சம்பிக்க' என்றிருந்தால் எமக்கு "எதிர்க்கட்சி தலைவர்" பதவி கிடைக்கும்!- பா.அரியநேத்திரன்
» இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகும் சாத்தியக்கூறு? - தினேஸை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum