Top posting users this month
No user |
Similar topics
ப்ரெட் சாய் குக்லா
Page 1 of 1
ப்ரெட் சாய் குக்லா
ப்ரெட் - 10
பால் - அரை லிட்டர்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 30
சீனி - கால் கப் + 3 மேசைக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி
முதலில் சாய் குக்லா செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சவும். அரை லிட்டர் பால் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்.
முந்திரியை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரி பொடி ஆகாமல் சிறு துகள்களாக இருக்கும்படி அரைத்துக் கொள்ளவும்.
ஒரு டவாவில் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ப்ரெட்டை போட்டு வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
பால் நன்கு சுண்டியதும் அதில் சீனியை சேர்த்து கிளறி விடவும். அதன் பின்னர் பொடி செய்த முந்திரியை போட்டு கிளறி விடவும்.
சீனி கரையும் வரை நன்கு கிளறி விட்டு 3 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும். இறக்கி வைத்து 5 நிமிடம் கழித்து ரோஸ் எசன்ஸ் ஒரு துளியை விட்டு கலந்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் நெய்யில் வாட்டி வைத்திருக்கும் ப்ரெட்டை அடுக்கி வைத்து அதில் முந்திரி கலந்த பாலுடன் ப்ரெட் மேலே ஊற்றவும். மேலே குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.
ப்ரெட்டை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறிய பின்னர் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum