Top posting users this month
No user |
Similar topics
இலங்கையுடனான நட்புறவில் தேவையற்ற இடையூறு: சீனா கவலை
Page 1 of 1

சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டமையே இதற்கான காரணமென பீஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் இடை நிறுத்தப்பட்டதால், பொருளாதார ஊக்குவிப்புக்கு உதவுதல், இலங்கையின் சமூக அபிவிருத்தி மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு தேவையற்ற இடையூறை ஏற்படுத்தி விட்டது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவும், இலங்கையும் ஒன்றை ஒன்று மதிக்கின்ற நட்பு நாடுகள்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட, பெருமளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள், உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கு இரு நாடுகளும் பங்களிப்புச் செய்துள்ளன.
அத்துடன், தாம் செயற்படும் நாடுகளின் சட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் மதித்து நடக்கும் படி, சீன நிறுவனங்களிடம், சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு மதித்து நடக்கும்போது, இருதரப்புக்கும் நன்மைகளை அளிக்கும் என்று நம்புகிறோம்.
சில கூட்டுறவு திட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மீளாய்வு செய்யும் உள்நாட்டு நடைமுறைகளை பின்பற்றுகிறது. அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அதனை நாம் மதிக்கிறோம்.
அண்மைக்காலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது, சீனாவுடன் உறவுகளையும் ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இலங்கை கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிர்க்கட்சி! திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரர் விசனம்
» தாய் சேய் சிகிச்சை நிலைய கட்டுமான பணிகளுக்கு இடையூறு: மக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum