Top posting users this month
No user |
Similar topics
நேபாள நிலநடுக்கத்தில் ஏற்பட்ட திக் திக் நிமிடங்கள் - மதுரை மாணவி விளக்கம்
Page 1 of 1

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய மாணவி ஒருவர், அதன் பயங்கரமான தருணங்களை தெரிவித்துள்ளார்.
மதுரை சூர்யா நகரை சேர்ந்த சித்த மருத்துவர் அப்துல் கரீம்–சமீமா ஆகியோரின் மகள் அனீஸ் பாத்திமா (வயது20), நேபாளத்தில் உள்ள நேபால் கன்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
அங்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் தப்பிய அனீஸ் பாத்திமா தமிழக அரசின் உதவியுடன் சென்னை திரும்பினார்.
மதுரையில் உள்ள வீட்டிற்கு நேற்று திரும்பிய அவர் நேபாள பூகம்பம் குறித்து கருத்து வெளியிட்டார்.
நான் தங்கியிருந்த விடுதி அறையில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. முதல் முறை என்பதால் எங்களால் பூகம்பத்தை உணர முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் தொடர்ந்து 20 முறை அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் விடுதி அறையை விட்டு வெளியே வந்தோம்.
30 கிலோமீட்டருக்கு அப்பால் மிகப்பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு திரளான மக்கள் இறந்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானோம். நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் சொந்த நாடு திரும்ப முடிவு செய்தோம். ஆனால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த சம்பவத்தால் எங்கள் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட 2 நாட்களும் உயிரை கையில் பிடித்தபடி இருந்தோம். இது மறக்க முடியாத சம்பவமாக மனதில் பதிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு
» நேபாள பூமி அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரிப்பு!
» முன்னேற்றத்திற்கு முப்பது நிமிடங்கள் தினமும் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum