Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்!- அசாத் சாலி
Page 1 of 1

இந்த நாட்டின் வரலாற்றில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அசாத் சாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.
மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னால் ஜனாதிபதி மகிந்த இந்த 19வது அரசியல் சரத்தை பாராளுமன்றத்தில் அமுல்படுத்தும் போது அதனைக் தோற்கடிப்பதற்காக ஒவ்வொரு விகாரைகளுக்குச் சென்றார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை 66 என்றும் மைத்திரி 77 என்றும் இரண்டாகப் பிரித்திருந்தார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி சகல 215 உறுப்பினர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இதில் அவர் வரலாற்று வெற்றி கண்டார். இந்த நன்மை அவருக்கே வரலாற்று ரீதியாகச் செல்லும்.
கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதியாக மைத்திரி சிறிசேன வெல்லாமல் மகிந்த வந்திருந்தால் இந்த மைத்திரி எட்டு அடிக்கு நிலத்தின் கீழ்தான் சென்றிருப்பார்.
அத்துடன் இந்தநாட்டில் வாழும் சகல சிறுபான்மை மக்களுக்கு பாரியளவில் அநீதிகள் பழிவாங்கல்களும் இடம்பெற்றிருக்கும்.
இந்த நாடு சுதந்திரமடைந்து இவ்வாறானதொரு சரித்திரப் புகழ் பெற்ற சம்பவம் 19வது சரத்தின் மூலம் நடந்திருப்பது இது தான் முதல் தடவை.
தற்பொழுது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினர் மிகவும் நிம்மதியாக வாழ்கின்றனர்.
கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தில் வியாபாரிகள் நிறைய வியாபாரம் செய்தோம் என்கின்றனர். பொதுமக்கள் கை நிறைய பணப்புழக்கம் உள்ளது என்கின்றனர்.
சிறுபான்மை மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை நடத்துவதில் இந்த ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனலாம்.
ஆனால் அண்மையில் விமல் வீரவன்ச உருவாக்கியுள்ள ராவண பலய மட்டும் 1000 வருடம் வரலாறு கொண்ட மாத்தளை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் சிலையொன்றை வைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அப்பிரதேச சிங்கள மக்கள் அவர்களை துரத்தி அடித்துள்ளனர்.
இங்கு வந்து பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். நாங்கள் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றோம். எனச் சொல்லி ராவணபலயவை திருப்பி அனுப்பியதை நாம் ஊடகங்கள் ஊடாகக் கண்டோம்;.
இவ்விடயம் பற்றி அண்மையில் அமைச்சர் நந்திமித்த எக்கநாயக்க அவர்கள் தவறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
பள்ளியை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறமுடியாது. அங்கு சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கடைகளை மட்டுமே அகற்றுமாறு அன்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் பள்ளிவாசலை அகற்றுமாறு இங்கு யாரும் அவர்களுக்கு பணிப்புரை விடுக்கவில்லை. இவ்விடயமாக அமைச்சர் கரு ஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்ககிரமசங்க ஆகியோர்களது தலைமையில் இவ்விடயத்தினை நாம் உரையாடி தீர்மானம் எடுப்போம்.
20வது தேர்தல் சட்டம் சம்பந்தமாக இந்த நாட்டில் உள்ள சகல 21 ற்கு மேற்பட்ட சிறுபான்மைக் கட்சிகள் கலந்து உரையாடி ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம். அதனை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமர்ப்பித்துள்ளோம்.
தொகுதி முறைத் தேர்தல் வந்ததும் வடகிழக்கு வெளியே உள்ள தேர்தல் தொகுதிகளில் வாழும் சிறுபான்மையினரது பிரதிநிதித்துவம் இல்லாமால் போகும். அத்துடன் சிறிய அரசியல் கட்சிகளும் தேர்தல் கேட்பதற்கு தொகுதிகள் இல்லாமல் போய்விடும் என அசாத் சாலி தெரிவித்தார்.
மனோ கணேசன் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையிட்டு நாம் சந்தோசப்படுகின்றோம்.
இதன் மூலம் பொலிஸ், நீதி, ஊடக சுதந்திர ஆணைக்குழுக்கள் நிறைவேற்றப்படும். 20வது தேர்தல் சட்டத்தில் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் அதற்காக நாங்கள் போராடுவோம்.
சகல சிறுபான்மை கட்சிகளது கருத்துக்கள், அவர்களது நன்மைகள் அதில் உள்ளடக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டே அதனை பாராளுமன்றத்தில் கொண்டு வருதல் வேண்டும்.
தொகுதி சீரமைப்பு பல அங்கத்தவர் தொகுதிகளும், அமைக்கப்படல் வேண்டும். நாட்டின் சனத்தொகையில் 40 வருடங்களுக்கு முன் தேர்தல் சட்டம் அமைக்கும் போது 75 லட்சம் இன்று 205 லட்சம் அன்று மலையக மக்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருந்தவர்களுக்கு இன்று வாக்குரிமை உண்டு. மாவட்டங்களில் பரந்து வாழுகின்றனர்.
கண்டி, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, பதுளை, புத்தளம், கேகாலை மாவட்டங்களில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்கு சர்ந்தர்ப்பம் உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா
» அசாத் சாலி நடைபிணம் என்கிறார் உதய கம்மன்பில
» மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை!- மு.கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum