Top posting users this month
No user |
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை!- மு.கா
Page 1 of 1

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு நற்பிட்டிமுனையில் இடம்பெற்ற இறுதிப் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எச்.எச்.எம்.நபார், ஏ.எல்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, மு.கா.உயர் பீட உறுப்பினர் எம்.எம்.தௌபீக் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு முதல்வர் நிஸாம் காரியப்பர் மேலும் பேசுகையில் கூறியதாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மைத்திரிபாலவை ஆதரிப்பதால் தெற்கில் அரச தரப்பினரால் இனவாதப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக உதய கம்மன்பிலவும் ஞானசார தேரரும் மிகத் தீவிரமாக இனவாதத்தை கக்குகின்றனர். பிரிவினைவாதம் பற்றிப் பேசி சிங்கள மக்களை பயம்காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக சிங்கள மக்கள் மைத்திரியை ஆதரிக்காமல் மஹிந்தவையே ஆதரிப்பார்கள் என்றும் கதைகள் பரப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு இடம்பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.
காரணம் என்னவென்றால் பொது எதிரணியில் ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிப்பதால் மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் பிரிவினைவாதத்திற்கு துணை போக மாட்டார் என ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க போன்றோர் சிங்கள மக்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதேவேளை ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க ஆகியோர் நாட்டின் இறைமையை பேணிப் பாதுகாக்கக் கூடிய உத்தமர்கள் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் சான்று பகன்றுள்ளனர்.
இனவாதப் பிரசாரங்களை நம்பி மக்கள் ஏமாறத் தேவை இல்லை என்பதையே இக்கருத்தின் மூலம் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் வன்முறையற்றதும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை உறுதி செய்யுமாறு அந்த மகாநாயக்க தேரர்கள், தேர்தல் ஆணையாலரஈ கோரியுள்ளனர். இதன் மூலம் அவர்களும் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆகையினால் மகிந்தவின் தோல்வியும் மைத்திர்யின் வெற்றியும் நிச்சயமான ஒன்று என்பதை நாம் திடமாக நம்ப வேண்டும். அதில் சந்தேகம் கொண்டு மனம் தளர்ந்து விடக் கூடாது.
இந்த நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இருந்து சில நூறு வாக்குகள் கூட மஹிந்தவுக்கு சென்று விடக் கூடாது என்பதில் இப்பகுதி மக்கள் உறுதியாக இருந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் உங்கள் தலைவிதி கூட இத்தேர்தலில் தான் தங்கியுள்ளது. நற்பிட்டிமுனை வாழ் முஸ்லிம்களின் சுதந்திரமான இருப்பு நீடிக்க வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum