Top posting users this month
No user |
Similar topics
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வலியுறுத்தி சுவரொட்டிகள்
Page 1 of 1

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வலியுறுத்தி நேற்று புதன்கிழமை அப்பிரதேசம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது அனைத்து பொது அமைப்புகள் சம்மேளனம் எனும் பெயரில் நான்கு வகையான சுவரொட்டிகள் அப்பிரதேசத்தின் அனைத்து வீதிகள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
தனி உள்ளூராட்சி மன்றம் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் இல்லையேல் தேர்தலை பகிஷ்கரிப்போம்! அரசே தனி உள்ளூராட்சி சபையை உடன் வழங்கு!
இனியும் பொறுமை காக்க தயாரில்லை! பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தனி உள்ளூராட்சி மன்றம் பெற்றுத் தருவோருக்கு 18000 வாக்குகள் சன்மானம்!
தலைமையை உறுதிப்படுத்திய மண்ணுக்கு வழங்கும் சன்மானம் என்ன? தன்மானமுள்ள சாய்ந்தமருது மக்களே ஒன்றுபடுவோம்! உள்ளூராட்சியை வென்றெடுப்போம்! போன்ற வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் பொது நிர்வாக, உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய கடந்த வாரம் உறுதியளித்திருக்கின்ற நிலையிலேயே இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
இது குறித்து சாய்ந்தமருது அனைத்து பொது அமைப்புகள் சம்மேளன முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வுத்தரவாதத்தை கூடிய விரைவில் நிறைவேற்றும் வகையில் அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே சம்மேளனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம்! முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்குமா?
» தேசிய நிறைவேற்று சபையை கலைக்குமாறு ஜே.வி.பி கோரிக்கை
» 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தனியான கடவுச்சீட்டு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum